சனீஸ்வர பகவான் தலநாயகனாக, முதல்மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித் தெய்வமாக கோயில் கொண்டிருப்பது குச்சனூர் ஒன்றேயாகும். வேறு எங்குமேயில்லை. சில தலங்களில் தனியாக இருந்தாலும் அங்கு உபசந்நதியாகவே உள்ளது. ஆகையால் சனீஸ்வர பகவானுக்கு குச்சனூரான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. செண்பகநல்லூர் என்று அழைக்ப்பட்ட பழமையான இவ்வூர் சிறந்த திருத்தலமாகும்.
பாண்டிய மன்னர் ஆண்ட மதுரையின்கண் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஓடுவதும், சுரபிநதி என்னும் பழம் பெருமையுடையதுமான சுருளி நதி ராஜா கால்வாய்ப் பாய்ந்தோடும் குச்சனூர் கிராமத்தின் மேற்கு...சனீஸ்வர பகவான் தலநாயகனாக, முதல்மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித் தெய்வமாக கோயில் கொண்டிருப்பது குச்சனூர் ஒன்றேயாகும். வேறு எங்குமேயில்லை. சில தலங்களில் தனியாக இருந்தாலும் அங்கு உபசந்நதியாகவே உள்ளது. ஆகையால் சனீஸ்வர பகவானுக்கு குச்சனூரான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. செண்பகநல்லூர் என்று அழைக்ப்பட்ட பழமையான இவ்வூர் சிறந்த திருத்தலமாகும்.
பாண்டிய மன்னர் ஆண்ட மதுரையின்கண் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஓடுவதும், சுரபிநதி என்னும் பழம் பெருமையுடையதுமான சுருளி நதி ராஜா கால்வாய்ப் பாய்ந்தோடும் குச்சனூர் கிராமத்தின் மேற்கு கரையருகில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கோயிலைச் சுற்றிச் சுற்றி சோலைகளும், அருகில் கால்வாய்களும், கால்வாயை ஒட்டி வயல்களும் நிறைந்து இருப்பதால் இயற்கை அன்னையின் இன்பக் காட்சியை இங்கு காணலாம். சுரபி நதியை சிவகங்கையென்றும் பாராட்டிக் கூறுவர்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். லிங்க வடிவில் சற்று அகன்றுள்ள இவரது தோற்றம் காண்போர் மனதைக் கவரும் தன்மையுடையது. சனி பகவானுக்குரிய கருமையும் அழகும் கொண்டது. மூலவருக்கு அருகில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ளார். ஆண்டுக்கொரு முறை பவனி வருபவர் உற்சவ மூர்த்தியேயாவார். சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம் குச்சனூர் தான். சனீஸ்வர பகவான் இரகுவம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும், உலக ஈஸ்வர பட்டம் பெற்றவரில் சிவபெருமானை அடுத்து சனிபகவான் என்பதால் நெற்றில் பட்டையும் அணிந்துள்ளார். முப்பெரும் தெய்வங்களான சிவன்,விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்பதால் (ஐக்கியமாகி இருப்பதால்) மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன. சனீஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் இது. அரூப வடிவமான இங்குள்ள சனீஸ்வர பகவானின் லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டே இருப்பதால் மஞ்சள்காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சனிதோஷம் உள்ளவர்கள் தங்கள் குறைகளை உணர்ந்து இங்கு வந்து வேண்டிக் கொண்டால் சனீஸ்வர பகவான் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பார்,