சனீஸ்வர பகவான் தலநாயகனாக, முதல்மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித் தெய்வமாக கோயில் கொண்டிருப்பது குச்சனூர் ஒன்றேயாகும். வேறு எங்குமேயில்லை. சில தலங்களில் தனியாக இருந்தாலும் அங்கு உபசந்நிதியாகவே உள்ளது. ஆகையால் சனீஸ்வரபகவானுக்கு குச்சனூரான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. செண்பகநல்லூர் என்று அழைக்ப்பட்ட பழமையான இவ்வூர் சிறந்த திருத்தலமாகும். பாண்டிய மன்னர் ஆண்ட மதுரையின் கண் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முல்லைப் பெரியாறு என்ற பெயரில் ஓடுவதும் சுரபிநதி என்னும் பழம் பெருமையுடையதுமான சுருளி நதி ராஜா கால்வாய்ப் பாய்ந்தோடும் குச்சனூர் கிராமத்தில் மேற்கு கரையருகில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கோயிலைச் சுற்றிச் சுற்றி சோலைகளும் அருகில் கால்வாய்களும் கால்வாயை ஒட்டி வயல்களும் நிறைந்து இருப்பதால்...