தல வரலாறு

இத்திருக்கோயில் போடி மாநகரை ஆட்சி செய்த நாயக்க மன்னரால் முதலில் கல்லால் ஆன கம்பத்தில் பெருமாள் வடிவமைக்கப்பட்டு அதன் பின்னர் அத்தி மரத்தால் ஆன பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ஊர் பொதுமக்களால் கோயில் முழு வடிவமைக்கப்பட்டு தற்போது உள்ள சிலைகள் நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் ஐஸ்வர்யங்களை கொடுக்கும் அஷ்டலட்சுமி சன்னதியும், சக்தி வாய்ந்த சக்கரத்தாழ்வார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது மிகவும் சிறப்பானது ஆகும்.