Screen Reader Access     A-AA+
அருள்மிகு முப்பிடாரியம்மன் திருக்கோயில், தென்கரை, பெரியகுளம் - 625601, தேனி .
Arulmigu Muppidariamman Temple, Thenkarai, Periyakulam - 625601, Theni District [TM032302]
×
Temple History

தல வரலாறு

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை என்ற ஊரில் அருள்மிகு முப்பிடாரியம்மன் திருக்கோயில் மூன்றாம்கேல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருவிழாவானது ஆடி மாதம் வெகுவிமர்சையாக நடைபெறும், வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமை அன்று மக்கள்கள் வருகை தருவார்கள், திருமணம் வேண்டி வருபவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.

தல பெருமை

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு பெரியகுளம் நகர் மேற்கு திசையில் இருந்தபோது இத்திருக்கோயில் அமைந்துள்ள இடம் என் கலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி கலத்தில் நல்லெண்ணை தயார் செய்வதற்கு எள்ளைக் காயவைத்து அருகிலுள்ள செக்கில் ஆட்டி எண்ணை எடுத்து வந்துள்ளனர். அப்போது ஒரு முதியவர் முன் மூன்று முகங்களைக் கொண்ட அம்மன் தோன்றி அவருக்கு அருள் பாலித்ததாகவும் அது முதல் அவர் அவருடைய உறவினர்களிடம் எடுத்துக்கூறி. மூன்று முகங்களை கொண்ட விக்ரகத்தை உருவாக்கி, ஒரு சிறிய ஆலயத்தை கட்டியதாகவும், மேற்படி ஆலயம் முப்பிடாரியம்மன் திருக்கோயில் என அழைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.