இத்திருக்கோயில் பெரியகுளம் நகரின் மையப் பகுதியில் தென்கரை, கடைவீதியை ஒட்டி அமைந்துள்ளது. பெரியகுளம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், தேனி கம்பம் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வருடா வருடம் மாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. திருமணம் ஆகாத இளம் வயதினர் இத்திருக்கோயிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், சேவார்த்திகள் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகள் விரைவில் நடைபெறும் என்பது இத்திருக்கோயிலின் ஐதீகம் ஆகும்