அருள்மிகு வெள்ளை விநாயகர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, சென்னை - 600001, சென்னை .
Arulmigu Vellai Vinayagar Temple, Muthialpet, Chennai - 600001, Chennai District [TM000348]
×
Temple History
தல வரலாறு
இக்கருவறை நடுவே உள்ள பத்ர பீடத்தின் மேல் உள்ள ஆவுடையார் மீது தாமரை இருக்கையில் வெள்ளை விநாயகர் வட திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இவர் தம் வலக்காலை மடித்து இடக்காலை தொங்கவிட்டு நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்கள் கடக முத்திரையில் தாமரை மலர்களை பற்றியுள்ளன. கீழ் வலக்கரத்தில் இனிப்பு உருண்டைகள் உள்ளன. இடக்கரம் வரத முத்திரையில் வழங்கும் கரமாக அமைந்துள்ளது.
வெள்ளை விநாயகரின் தலையை அழகிய மகுடம் அலங்கரிக்கிறது. நெற்றியில் பட்டமும் கழுத்தில் மணி வடமும் கைகளில் காப்பும் இடது மார்பில் பூஸீலும் இடையில் கச்சையும் வெள்ளை விநாயகரை அலங்கரிக்கின்றன.
இவ்வுருவம் வெள்ளை நிற சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளதால் வெள்ளை விநாயகர் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இது...இக்கருவறை நடுவே உள்ள பத்ர பீடத்தின் மேல் உள்ள ஆவுடையார் மீது தாமரை இருக்கையில் வெள்ளை விநாயகர் வட திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இவர் தம் வலக்காலை மடித்து இடக்காலை தொங்கவிட்டு நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்கள் கடக முத்திரையில் தாமரை மலர்களை பற்றியுள்ளன. கீழ் வலக்கரத்தில் இனிப்பு உருண்டைகள் உள்ளன. இடக்கரம் வரத முத்திரையில் வழங்கும் கரமாக அமைந்துள்ளது.
வெள்ளை விநாயகரின் தலையை அழகிய மகுடம் அலங்கரிக்கிறது. நெற்றியில் பட்டமும் கழுத்தில் மணி வடமும் கைகளில் காப்பும் இடது மார்பில் பூஸீலும் இடையில் கச்சையும் வெள்ளை விநாயகரை அலங்கரிக்கின்றன.
இவ்வுருவம் வெள்ளை நிற சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளதால் வெள்ளை விநாயகர் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இது வடநாட்டில் உள்ள வெள்ளை கல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யானை முகமும் ,மானிட உடலும், அகன்ற காதும், வலம்புரி துதிக்கையும், அளவான அங்கங்களும், சரிந்த தொந்தியும் கொண்டு விளங்கும் இவ்வுருவம் 75 ஆண்டுகளுக்கு முற்பட்டது.