இக்கருவறை நடுவே உள்ள பத்ர பீடத்தின் மேல் உள்ள ஆவுடையார் மீது தாமரை இருக்கையில் வெள்ளை விநாயகர் வட திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இவர் தம் வலக்காலை மடித்து இடக்காலை தொங்கவிட்டு நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்கள் கடக முத்திரையில் தாமரை மலர்களை பற்றியுள்ளன. கீழ் வலக்கரத்தில் இனிப்பு உருண்டைகள் உள்ளன. இடக்கரம் வரத முத்திரையில் வழங்கும் கரமாக அமைந்துள்ளது. வெள்ளை விநாயகரின் தலையை அழகிய மகுடம் அலங்கரிக்கிறது. நெற்றியில் பட்டமும் கழுத்தில் மணி வடமும் கைகளில் காப்பும் இடது மார்பில் பூஸீலும் இடையில் கச்சையும் வெள்ளை விநாயகரை அலங்கரிக்கின்றன. இவ்வுருவம் வெள்ளை நிற சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளதால் வெள்ளை விநாயகர் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இது...