அருள்மிகு நம்புநாயகியம்மன் திருக்கோயில், Rameswaram - 623526, இராமநாதபுரம் .
Arulmigu Nambunayaki Amman Temple, Rameswaram - 623526, Ramanathapuram District [TM035673]
×
Temple History
தல வரலாறு
தலவரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இராமேசுவரம் தீவில் உள்ள இந்தப் பகுதி, தாழை மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. ஒரு சமயம், விறகு வெட்டுபவர் இங்குள்ள தாழை மரமங்களை வெட்டும்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவர் பயந்து போய் ஊர்மக்களை அழைத்து வந்தார்.
அப்போது ஒருவருக்கு அருள் வந்தது. அவர் இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள் என்றார்.
அதன்படியே அப்பகுதி மக்கள், அன்னையைப் பூமியில் இருந்து தோண்டி எடுத்தனர் .ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலி மஞ்சளை வைத்து பூசினர். ரத்தம் நின்றது. இதன்பின் அன்னைக்குச் சிறுகூரையில் கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். அது...தலவரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இராமேசுவரம் தீவில் உள்ள இந்தப் பகுதி, தாழை மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. ஒரு சமயம், விறகு வெட்டுபவர் இங்குள்ள தாழை மரமங்களை வெட்டும்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவர் பயந்து போய் ஊர்மக்களை அழைத்து வந்தார்.
அப்போது ஒருவருக்கு அருள் வந்தது. அவர் இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள் என்றார்.
அதன்படியே அப்பகுதி மக்கள், அன்னையைப் பூமியில் இருந்து தோண்டி எடுத்தனர் .ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலி மஞ்சளை வைத்து பூசினர். ரத்தம் நின்றது. இதன்பின் அன்னைக்குச் சிறுகூரையில் கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். அது முதல் அப்பகுதி மக்கள் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலயம், சுற்றிலும் மணல் திட்டுகள், மரங்கள் என இயற்கை எழிலாக அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்கே விநாயகர். நாகநாதர் மற்றும் பனைமரத்து காளியம்மன் பீடம், சங்கிலிக் கருப்பன் பீடம்,ரெட்டைத்தாழை முனீஸ்வரர் பீடம், தலமரமான வேப்பமரம் அமைந்துள்ளன. வடக்கே தல தீர்த்தம் கருப்பண்ணசுவாமி, ஐயனார், ராக்கச்சி அம்ம, பேச்சியம்மன், கருப்பாயி அம்மன், இருளாயி அம்மன், ஆலமரத்தின் கீழ் தர்ம முனீஸ்வரர் அருள்புரிகிறார்கள், தெற்கே இருளப் சுவாமி பீடம், மாடசுவாமி பீடம் ஆகியன அமைந்துள்ளன.
ஆலயத்திற்குள் நுழைந்ததும், முன் மண்டபம் அதன் உள்ளே கருவறை முன் மண்டபம், விநாயகர் மற்றும் செண்பகப்பெருமாள் சன்னதிகளும், கருவறைக் காவலர்களாக ஆண் பூதமும் மற்றும் பெண் பூதமும் காவல்புரிகின்றனர்.
கருவரைக்குள் இரண்டு அம்மன்கள் காட்சி தருகின்றனர். பழமையான தாழைவன ஈஸ்வரியும், நடுநாயகமாகச் சுதைவடிவில் அலங்கார அம்மனும் இருக்கின்றனர். இதன் அடியில் பழைய சுதையம்மன் மறைந்துள்ளது.