அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், Ariyakurichi - 630556, சிவகங்கை .
Arulmigu Vettudaiyar Kaliamman Temple, Ariyakurichi - 630556, Sivagangai District [TM035708]
×
Temple History
தல பெருமை
சிவன் பிட்சாடனாராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்தபோது, அவர்களது இணைப்பில் உருவானவர் ஐயப்பன். இவரையே மக்கள் சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர். ஒரு சமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்ச மரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது....சிவன் பிட்சாடனாராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்தபோது, அவர்களது இணைப்பில் உருவானவர் ஐயப்பன். இவரையே மக்கள் சாஸ்தா என்றும், அய்யனார் என்றும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். ஓரிடத்தில் கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர். ஒரு சமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்ச மரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு வெட்டுடையார் காளி என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே ஸ்தலம் அழைக்கப்பெற்றது. ஆரம்பத்தில் இந்த ஊரில் தான் அய்யனார் கோயில் இருந்தது. இதை ஸ்தாபித்தவர் யார் என்பது தெரியவில்லை. அய்யனாரை ஒரு குடும்பத்தினர் பூஜித்து வந்தனர். அந்தக் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் இருவர். மூத்தவர் காரிவேளார். இளையவர் கருப்ப வேளார். இருவரும் முறை போட்டு அந்தக் கோயிலின் பூஜையை செய்து வந்தனர். ஒரு முறை அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காரிவேளார் கேரளா சென்று மாந்திரீக வித்தைகளைக் கற்றுக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். தான் கற்ற வித்தைகளை நடத்த சில தேவதைகளைப் பயன்படுத்தினார். இவர் அய்யனாருக்கு பூஜை செய்து வரும் காலங்களில் சன்னதிக்கு முன் மணல் பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. இது யாவும் காளிக்கு உரியது என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தில் காளியை பிரதிஷ்டை செய்தார். இவர் தோற்றுவித்ததே வெட்டுடையார் காளியம்மன். ஈச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட காரணத்தால் அய்யனாருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றும், காளிக்கு வெட்டுடையார் காளி என்றும் பெயர் வந்தது.
புராண பின்புலம்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை.
இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு என்று சொல்லும், வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை நீதிபதி என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை.
இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு என்று சொல்லும், வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை நீதிபதி என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.