தல வரலாறு

அருள்மிகு உந்திபூத்தப் பெருமாள் இத்திருக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள பெருமாள் கமலநாத பெருமாள் என்று அழைக்கப்பட்டார். பின்னர் இராமனுஜர் இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து இப்பெருமாளை உந்திபூத்த பெருமாள் என்று அழைத்தாக வரலாறு கூறுகிறது. இத்திருத்தலத்தில் பெருமாள் மிகவும் சிறப்பு வாய்ந்த பெருமாளாக கருதப்படுகிறது. இது இராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை வட்டத்தில் , இத்திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.