,இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டியில் அருள்மிகு உந்திபூத்தப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் பெருமாளை வழிபட்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது ஐதீகம். மேலும் பாற்கடலை கடையும் போது ஏற்பட்டு சங்கின் ஒலியும் இங்கு திருக்கோயில் அமைத்து பெருமாளை பிரதிஷ்டை செய்யும் போது ஏற்பட்ட சங்கின் ஒலியும் ஒரே மாதிரியாக இருந்ததாக வரலாறு கூறுகிறது.இங்கு வீற்றிருக்கும் காவல் தெய்வமான கருப்பரை வணங்கினால் தீராத வியாதியும் தீரும் என்பது ஐதீகம்