Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் திருக்கோயில், Keelakottai - 630305, சிவகங்கை .
Arulmigu Aathinamilagi Ayanaar Temple, Keelakottai - 630305, Sivagangai District [TM035724]
×
Temple History

தல வரலாறு

1876 1878ம் ஆண்டுகளில் தாது வருடம் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது, சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை எனும் கிராமத்தில் இருந்த மக்கள், அருகிலிருந்த எட்டு ஊர்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.அப்போது, அப்பகுதியின் பஞ்சத்தைப் பார்வையிட வந்த சிவகங்கை மன்னர், கீழக் கோட்டை பகுதியில் குடிசை அமைத்து, கண்ணாங் குடி என்னும் விவசாய கண்மாயை ஏற்படுத்தியதோடு, அதற்குக் காவலாகவும், ஊர் செழிக்கவும் புலம்பெயர்ந்த மக்களின் குல தெய்வமான ஆதினமிளகி ஐயனார் கோயிலைக் கட்டியதாகத் தலவரலாறு.இந்தக் கோயிலின் அருகிலேயே சிவகங்கை மன்னரின் குலதெய்வமான பொக்கிஷக் கோட்டை காளியின் கோயிலும் அமைந்திருக்கிறது. மன்னர் இந்தக் கோயிலைக் கட்டிய பிறகு, அங்கே பஞ்சமே ஏற்பட்டதில்லை என்கிறார்கள் ஊர்மக்கள்.