அருள்மிகு தாமணிசெல்ல அய்யனார் திருக்கோயில், Periyakottai - 630108, சிவகங்கை .
Arulmigu Thamani Chella Iyanar Temple, Periyakottai - 630108, Sivagangai District [TM035729]
×
Temple History
தல வரலாறு
சம்மட்டி செல்வம் என்பவர் குதிரை செய்து பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளர் . அய்யனாருக்கு குதிரை செய்யும் போது அந்த வழியாக சிவகங்கையை ஆண்ட மன்னர் தஞ்சாவூர் செல்லும் போது சம்மட்டி செல்வத்தை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினாவினர். அதற்கு சம்மட்டி செல்வம் என்பவர் என் அய்யனாருக்கு குதிரை செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார் .அதற்கு மன்னர் அந்த குதிரை புல் திண்ணுமா என்று கேட்டு விட்டு , நான் தஞ்சாவூர் சென்று வரும் போது இந்த குதிரை புல் திண்ண வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் நான் உன் தலையை வெட்டி விடுவேன் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. உடனே சம்மட்டி செல்வம் என்பவர் செல்லமே...சம்மட்டி செல்வம் என்பவர் குதிரை செய்து பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளர் . அய்யனாருக்கு குதிரை செய்யும் போது அந்த வழியாக சிவகங்கையை ஆண்ட மன்னர் தஞ்சாவூர் செல்லும் போது சம்மட்டி செல்வத்தை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினாவினர். அதற்கு சம்மட்டி செல்வம் என்பவர் என் அய்யனாருக்கு குதிரை செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார் .அதற்கு மன்னர் அந்த குதிரை புல் திண்ணுமா என்று கேட்டு விட்டு , நான் தஞ்சாவூர் சென்று வரும் போது இந்த குதிரை புல் திண்ண வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் நான் உன் தலையை வெட்டி விடுவேன் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. உடனே சம்மட்டி செல்வம் என்பவர் செல்லமே அய்யனாரே நான் செய்வேன் என்று புலம்பி கொண்டிருக்கும் போது அய்யனார் நேரில் தோன்றி நீ மண்குதிரைக்கு புல்லை கொடு உண்ணும் என்றார். அரசர் அந்த மண்குதிரைக்கு புல்லை கொடுத்ததும் குதிரை புல்லை உண்டது. அதனை கண்ட அரசர் அய்யனாருக்கு மானியமாக நிலங்களை கொடுத்தார் . எனவே இங்கு வீற்றிருக்கும் அய்யனார் தாமணி அய்யனார் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது