இத்திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பெரியகோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெரியகோட்டை கிராமத்தில் சம்மட்டி செல்வம் என்பவர் குதிரை செய்து பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளர் . அய்யனாருக்கு குதிரை செய்யும் போது அந்த வழியாக சிவகங்கையை ஆண்ட மன்னர் தஞ்சாவூர் செல்லும் போது சம்மட்டி செல்வத்தை பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினாவினர். அதற்கு சம்மட்டி செல்வம் என்பவர் என் அய்யனாருக்கு குதிரை செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார் .அதற்கு மன்னர் அந்த குதிரை புல் திண்ணுமா என்று கேட்டு விட்டு , நான் தஞ்சாவூர் சென்று வரும் போது இந்த குதிரை புல் திண்ண வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால்...