Arulmigu Kalangatha Kanda Vinayagar Temple, Vellianoorani - 630302, சிவகங்கை .
Arulmigu Kalangatha Kanda Vinayagar Temple, Vellianoorani - 630302, Sivagangai District [TM035731]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில், வெள்ளையன் ஊரணி,
தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், சிவகங்கை மாவட்டம்
உபகோயில் - அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில், தேவகோட்டை
தல வரலாறு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில் சட்டப்பிரிவு 46-2ன் கீழ் உள்ள பட்டியலைச் சார்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் உபகோயிலான வெ.ஊரணியில் உள்ள அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறப்புமிக்க திருக்கோயில். மேலும் இத்திருக்கோயில் செயல் அலுவலர் நிலை 4 மற்றும் தேவகோட்டை நகரத்தார் சமுகத்தைச் சேர்ந்த வீர மற்றும் அள குடும்பத்தைச் சேர்ந்த பரம்பரை அறங்காவலர்கள் நிர்வாக பொறுப்பில் உள்ள திருக்கோயிலாகும்.
உகோயிலான அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில்,...அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில், வெள்ளையன் ஊரணி,
தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், சிவகங்கை மாவட்டம்
உபகோயில் - அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில், தேவகோட்டை
தல வரலாறு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில் சட்டப்பிரிவு 46-2ன் கீழ் உள்ள பட்டியலைச் சார்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் உபகோயிலான வெ.ஊரணியில் உள்ள அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறப்புமிக்க திருக்கோயில். மேலும் இத்திருக்கோயில் செயல் அலுவலர் நிலை 4 மற்றும் தேவகோட்டை நகரத்தார் சமுகத்தைச் சேர்ந்த வீர மற்றும் அள குடும்பத்தைச் சேர்ந்த பரம்பரை அறங்காவலர்கள் நிர்வாக பொறுப்பில் உள்ள திருக்கோயிலாகும்.
உகோயிலான அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில், இந்நகரின் மையத்தில் வெள்ளையன் ஊரணியின் கீழ்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன்மண்டபத்தில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் அமர்ந்துள்ளார். மூலஸ்தானத்திற்கு வடபுறம் அருள்மிகு ஐநூற்றீஸ்வரர், அருள்மிகு பெரியநாயகியம்மன் மற்றும் அருள்மிகு சண்டிகேசுவரர் அமைந்துள்ளது. முன்மண்டபத்தில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளன பிரகாரத்தில் தெற்கு பிரகாரத்தில் அருள்மிகு தட்ஷிணாமூர்த்தியும், பின்புற பகுதியில்அருள்மிகு கன்னி மூல கணபதியும், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமியும், வடக்கு பிரகாரத்தில் அருள்மிகு பைரவர் ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ளன. மேலும் இராஜகோபுர வாயிலில் வலதுபுறம் விநாயகர் மற்றும் இடதுபுறம் பாலதண்டாயுதபாணி அமைந்துள்ள சிறப்பாகும். ஆலயத்தின் தென்புறத்தில் பஜனை கூடம், திருமடப்பள்ளி மற்றும் அபிஷேக கிணறு ஆகியவைகள் அமைந்துள்ளன. இவ்வாலயம் சூல வர்த்தகர்கள் உள்ளனர். தினசரி இத்தெய்வத்தை வழிபடாமல் இவர்கள் வர்த்தகம் துவங்குவதில்லை. ஆண்டுதோரும் வர்த்தகர்கள் இவ்வாலயத்தில் முதல் கணக்கு துவங்கினால் வர்த்தகம் பெருகும் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை. ஆண்டுதோரும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி பிரம்மோத்ஸவம் பத்து நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பத்து நாட்களும் சுவாமி எழுந்தருளல் உண்டு. வர்த்தகர்களும், நகரத்தாரும் மண்டகப்படிறை சிறப்பிக்கின்றனர். 9ம் நாள் தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிரார்.