அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Kottur - 630311, சிவகங்கை .
Arulmigu Muthumariamman Temple, Kottur - 630311, Sivagangai District [TM035739]
×
Temple History
தல வரலாறு
கிராம தேவதைகளில் ஒன்றான ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பொது வரலாறு இருந்தாலும் ஸ்தலவரலாறு ஒன்று உண்டு. பொது அம்பாள் முத்துவடிவம் கொண்ட அம்மை நோயை தானே ஏற்றுக்கொண்டு பக்தர்களை காத்து வருகிறார் உயிர்கள் வாழ உணவு முக்கியம் அதற்கு மழை அவசியம், அதை கொடுப்பவள் மாரி , மாரியை கொடுப்பவள் மாரியம்மன்.
ஸ்தலவரலாறு
1850-ம் ஆண்டுகளில் கோட்டூரில் வாழ்ந்து வந்த மூன்று கரை பங்காளிகளான லக்ஷ்மிமனவேளாளர் , பெரியகருப்பவேளாளர் , ஆதி வேளாளர் என்ற மூவரும் அந்த நேரத்தில் அம்மையினாலும் பசி , பஞ்சமும் ஏற்பட்டதால் மக்கள் நலம் காக்க தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் மணமேடை அமைத்து மாரியம்மன் ஸ்தாபிதம் செய்து வந்துள்ளனர்.
தங்களுக்கே உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் நெய்வேத்யம் செய்து பூஜையை தொடர முடியாத...கிராம தேவதைகளில் ஒன்றான ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பொது வரலாறு இருந்தாலும் ஸ்தலவரலாறு ஒன்று உண்டு. பொது அம்பாள் முத்துவடிவம் கொண்ட அம்மை நோயை தானே ஏற்றுக்கொண்டு பக்தர்களை காத்து வருகிறார் உயிர்கள் வாழ உணவு முக்கியம் அதற்கு மழை அவசியம், அதை கொடுப்பவள் மாரி , மாரியை கொடுப்பவள் மாரியம்மன்.
ஸ்தலவரலாறு
1850-ம் ஆண்டுகளில் கோட்டூரில் வாழ்ந்து வந்த மூன்று கரை பங்காளிகளான லக்ஷ்மிமனவேளாளர் , பெரியகருப்பவேளாளர் , ஆதி வேளாளர் என்ற மூவரும் அந்த நேரத்தில் அம்மையினாலும் பசி , பஞ்சமும் ஏற்பட்டதால் மக்கள் நலம் காக்க தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் மணமேடை அமைத்து மாரியம்மன் ஸ்தாபிதம் செய்து வந்துள்ளனர்.
தங்களுக்கே உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் நெய்வேத்யம் செய்து பூஜையை தொடர முடியாத நிலையில் ஒருநாள் இரவு கனவில் மேற்கண்ட மூவருக்கும் ஒரே நேரத்தில் தோன்றி அதாவது சிறுபெண் குழந்தையாக என்னை பட்டினி போடாமல் தினமும் எனக்கு உணவு வழங்குங்கள் என்றும் எந்திரம் வைத்து பிரதிஷ்டை செய்யுங்கள் என்றும் அம்மையிலிருந்து காப்பேன் என்றும் விவசாயம் செழிக்க மாரியாய் வருவேன் என்றும் கூறி மறைந்தார்.
அந்த தெய்வ வாக்கை அன்றில் இருந்து ஆச்சரியர்களில் ஒருவரான கிருஷ்ண வாத்தியார் யந்திர பிரதிஷ்டை செய்து பூஜை இன்றளவும் வேளாளர்கள் செலவிலேயே படித்தரம் செய்து வருகிறார்கள், தெய்வ வாக்கின் படி அம்மை நோய் முற்றிலும் குறைந்து அம்பிகையின் அருளால் மழை வானம் செழித்து சுற்றளவில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்கு முதற் தாயாக கோட்டூர் முத்துமாரியம்மன் விளங்குகிறாள்.
அம்பிகைக்கு நேர்த்திக்கடன்
1. அங்கபிரதர்சனம் செய்தல் ஆண்கள்
2. கும்பிட தனம் செய்தல் பெண்கள்
3. குழந்தைகளை அம்பிகை பெயருக்கு எழுதி வைத்தல்
4. பால்குடம் எடுத்தல் காவடி எடுத்தல்
5. கரும்பால் தொட்டிக்காட்டுதல்
6. அபிஷேக ஆராதனை செய்து வழிபடல்
7.முடிஇறக்குதல்
தெய்வ வாக்கின் படி பங்குனி மாதம் வது செவ்வாய் மாபெரும் உற்சவம் நடைபெறுகிறது அதில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டு மேற்கண்ட காணிக்கையை செலுத்துகின்றனர்
சுவாமி கரகம் எடுக்கப்பட்டு அதன்பின் முளைப்பாரி அம்மன் சன்னதியில் வைத்து மறுநாள் குளத்தில் கரைக்கப்படுகின்றது. அந்த மாலை ரிஷப வாகனத்தில் அம்பாள் உற்சவத்தை காண்கிறார் என்ற ஐதீகத்தின் படி மஞ்சுவிரட்டு நடைபெறுகின்றது.
கும்பிட தனம் விளக்கம்
அம்மனின் உற்சவத்தை காண கோவிலைச்சுற்றி தேவர்கள் நிற்பார்கள் பெண்கள் ஒரு அடிக்கு ஒரு அடி விழுந்து வணங்கும் போது தேவர்களையும் வணங்கும் பாக்கியம் கிடைக்கிறது
குழந்தைகளை அம்பிகை பெயருக்கு எழுதி வைத்தல்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கல்வியில் தேர்ந்து விளங்கவும் நோய்களில் இருந்து காப்பாற்ற அம்மனுக்கு தத்து கொடுத்து பின்னர் ஏலத்தில் திரும்ப பெற்று கொள்வர்