கிராம தேவதைகளில் ஒன்றான ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பொது வரலாறு இருந்தாலும் ஸ்தலவரலாறு ஒன்று உண்டு. பொது அம்பாள் முத்துவடிவம் கொண்ட அம்மை நோயை தானே ஏற்றுக்கொண்டு பக்தர்களை காத்து வருகிறார் உயிர்கள் வாழ உணவு முக்கியம் அதற்கு மழை அவசியம், அதை கொடுப்பவள் மாரி , மாரியை கொடுப்பவள் மாரியம்மன். ஸ்தலவரலாறு 1850-ம் ஆண்டுகளில் கோட்டூரில் வாழ்ந்து வந்த மூன்று கரை பங்காளிகளான லக்ஷ்மிமனவேளாளர் , பெரியகருப்பவேளாளர் , ஆதி வேளாளர் என்ற மூவரும் அந்த நேரத்தில் அம்மையினாலும் பசி , பஞ்சமும் ஏற்பட்டதால் மக்கள் நலம் காக்க தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் மணமேடை அமைத்து மாரியம்மன் ஸ்தாபிதம் செய்து வந்துள்ளனர். தங்களுக்கே உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் நெய்வேத்யம் செய்து பூஜையை தொடர முடியாத...