108 திவ்ய தேசங்களில் 45 வது திவ்ய தேசமாகும். பாண்டிய நாடு திவ்ய தேசங்கள் 18ல் 5வது திவ்ய தேசம் ஆகும். மூலவர் நின்ற நாராயண பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். பெருமாளின் வலது புறத்தில் ஸ்ரீதேவி நீளாதேவி பெருமாளின் இடது புறத்தில் பூமாதேவி ஜாம்பவதி தாயார்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். பெருமாளின் வலது புறத்தில் கருடன் அருணன் மார்க்கண்டேய மகரிஷி பெருமாளின் இடது புறத்தில் அநிருத்தன் உஷை தம்பதியரும் பிருகு மகரிஷியும் மூல ஸ்தானத்தில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் நின்ற திருக்கோலத்தில் செங்கமலத்தாயார் அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார். பன்னிரு ஆழ்வார்களில் முதலர்வர்கள் ஒருவரான பூதத்தாழ்வாரும் ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரும் பாசுரம் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும். சங்க காலத்திலே...108 திவ்ய தேசங்களில் 45 வது திவ்ய தேசமாகும். பாண்டிய நாடு திவ்ய தேசங்கள் 18ல் 5வது திவ்ய தேசம் ஆகும். மூலவர் நின்ற நாராயண பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். பெருமாளின் வலது புறத்தில் ஸ்ரீதேவி நீளாதேவி பெருமாளின் இடது புறத்தில் பூமாதேவி ஜாம்பவதி தாயார்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். பெருமாளின் வலது புறத்தில் கருடன் அருணன் மார்க்கண்டேய மகரிஷி பெருமாளின் இடது புறத்தில் அநிருத்தன் உஷை தம்பதியரும் பிருகு மகரிஷியும் மூல ஸ்தானத்தில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் நின்ற திருக்கோலத்தில் செங்கமலத்தாயார் அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார். பன்னிரு ஆழ்வார்களில் முதலர்வர்கள் ஒருவரான பூதத்தாழ்வாரும் ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரும் பாசுரம் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும். சங்க காலத்திலே இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வார்த்திகன் கதை இவ்வூரில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவ்வூரின் பழமை தெரிந்து கொள்ளலாம். புராண காலங்களில் துவார யுக காலத்தில் கிருஷ்னனின் பேரனான அனிருத்தனுக்கும் பாணாசூரனின் மகளான உஷைக்கும் இத்தலத்தில் திருக்கல்யாணம் நடந்ததாக உள்ளது. பாணாசுரனை வதம் செய்ய இத்தலத்தில் தயார் தவம் செய்ததாக கூறப்படுகிறது.
இலக்கிய பின்புலம்
ஆலிலையும் ஆதி சேஷனுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற போட்டியில் ஊழி காலத்தில் மட்டுமே பெருமாள் ஆலிலையில் பள்ளி கொள்கிறார். மற்ற காலங்களில் ஆதிசேஷன் மேல் தான் பள்ளி கொள்கிறார் என்ற நிலையில் ஆலிலையின் குறை போக்கவே பெருமாள் இத்தலத்தில் ஆலமரம் மலையாகவே இருந்ததாகவும் அதன் மீது பெருமாள் தங்கி காட்சி தந்தார். ஆதலால் இவ்வூருக்கு தங்கால மலை என்று பெயர் ஏற்பட்டது. பின்பு தாயாரின் சிறப்பு கருதி திரு என்ற நிலை உயர்த்தி திருத்தண்கால் என்றானது. பின்பு திருத்தங்கல் என்று மருவியது.ஆலிலையும் ஆதி சேஷனுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற போட்டியில் ஊழி காலத்தில் மட்டுமே பெருமாள் ஆலிலையில் பள்ளி கொள்கிறார். மற்ற காலங்களில் ஆதிசேஷன் மேல் தான் பள்ளி கொள்கிறார் என்ற நிலையில் ஆலிலையின் குறை போக்கவே பெருமாள் இத்தலத்தில் ஆலமரம் மலையாகவே இருந்ததாகவும் அதன் மீது பெருமாள் தங்கி காட்சி தந்தார். ஆதலால் இவ்வூருக்கு தங்கால மலை என்று பெயர் ஏற்பட்டது. பின்பு தாயாரின் சிறப்பு கருதி திரு என்ற நிலை உயர்த்தி திருத்தண்கால் என்றானது. பின்பு திருத்தங்கல் என்று மருவியது.