தல வரலாறு
சுமார் 10ம் நூற்றாண்டில் செண்பகபுரியை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்த கண்டி சேதுபதியும், பாண்டிசேதுபதியும்,தினந்தோறும் மதுரையம்பதிக்கு சென்று மீனாட்சி சொக்கநாதரை வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்ட நிலையில். ஒரு சமயம்ஆணைக்கோட்டம் என்னும் சிற்றுரில் உள்ள அர்ச்சுனா நதியில் ஓடிய கட்டுக்கடங்காத மழை வெள்ளத்தால் மதுரைபயணம்தடைபட்டு அசரீரி வாக்காக வைப்பாற்றின் வடகரையில் மயானத்தின் மேற்கே கருடன் வட்டமிட்டு காட்டும் இடத்தில தனக்கு ஆலயம் எழுப்புக என ஒலித்ததைக் கேட்டு, இத்திருக்கோயிலை கட்டி வழிபாடு செய்து வந்தனர். மதுரை சென்று மீனாட்சி சொக்கநாதரை வழிபாடு செய்ய இயலாதவர்கள் இங்கே வழிபட்டதாக ஐதீகம்.