Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொக்கநாதசாமி திருக்கோயில், அருப்புக்கோட்டை - 626101, விருதுநகர் .
Arulmigu Chokkanatha Swamy Temple, Aruppukottai - 626101, Virudhunagar District [TM035766]
×
Temple History

தல வரலாறு

விருதுநகர் மாவட்டம்,அருப்புக்ககோட்டை நகரில் உள்ள அருள்மிகு மீனாட்சி உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில் வளம் பொருந்திய பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரைக்கு தெற்கே சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தும், 800 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலானதும் குரு சாப விமோசன ஸ்தலமானவும் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் ஸ்தலமாகவும் முற்காலத்தில் பூர்வீக புண்ணிய ஷேத்திரமாகிய செங்பாடிருக்கை இடத்துவளி என்று அழைக்கப்பட்டும் வில்வ வன ஷேத்திரமானபுண்ணிய பூமியில் இறைவன் குறள் மணீஸ்வரர் என்ற பெயரிலும் இறைவி அருந்தவ நாச்சியார் என்ற பெயரிலும் வணங்கப்பட்டு வந்த கோயிலை பாண்டிய நாட்டை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மாமன்னர் குரு சாப விமோசனத்திற்காக இத்திருக்கோயிலினை கி.பி.1216ம் ஆண்டில் அதிக அளவு விஸ்தரிப்பு செய்தும் திருப்பணிகள் செய்தும் வந்ததுள்ளார்....

தல பெருமை

அருப்புக்கோட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள இடம் ஆதியில் வில்வவனமாகவும், மகான்களின் தலவனமாகவும் திகழ்ந்தது. ஊாின் கிழக்கு கோடியில் அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலைக்கு வடக்கே தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மேற்கே சொக்கலிங்கபுரத்தில் நடுநாயமாக இக்கோயில் எழுந்துள்ளது. பாண்டியர்களின் கட்டிட கலைக்கு கட்டியம் கூறுவதாக இக்கோயில் அமைந்துள்ளது. கூடல் கோயிலின் சாயலை இக்கோயில் கொண்டுள்ளது. இரண்டுஉயரமான மேடைகளில் அண்ணலும், அன்னையும் கருவறை கொண்டு விளங்குகி்ன்றனர். ஐந்து தள விமானம் தூல லிங்கமாக நிற்கிறது. இது குருசாப விமோசன தலம் ஆகும். இத்திருக்கோயிலின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது இத்தலத் தீர்த்தமான சூர்ய புஷ்கரணி என்னும் தெப்பக்குளம். இது கோயிலுக்கு வலப்பக்கம் திருச்சுழி சாலையை ஒட்டி தெற்கே மூன்றரை ஏக்கர் பரப்பில்...