குரு சாப விமோசன ஸ்தலமாகவும், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் ஸ்தலமாகவும்,முற்காலத்தில், வில்வ வன ஷேத்திரமான புண்ணியஷேத்திரமாகிய செங்காட்டிருக்கை இடத்துவளி என்று அழைக்கப்பட்டும், வில்வ வன ஷேத்திரமான புண்ணிய பூமியில் இறைவன் குறள் மணீஸ்வரர் என்ற பெயரிலும் , இறைவி அருந்தவ நாச்சியார் என்ற பெயரிலும் வணங்கப்பட்டு வந்த கோயிலை பாண்டிய நாட்டை ஆண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மாமன்னன் குரு சாப விமோசனத்திற்காக இத்திருக்கோயிலினை கி.பி.1216ம் ஆண்டில் அதிக அளவு விஸ்தரிப்பு செய்து திருப்பணி செய்து திருக்கோயிலை வணங்கி வரும் போது மூலவர் லிங்கம் சொக்கதங்கமென ஜொலித்ததால் சொக்கநாதன் எனப்பெயரிட்டதாக கூறப்படுகிறது.திருக்கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள திருக்குளத்தினை கி.பி.1193ம் ஆண்டு திருவாள உடையார் சோழகங்க மகன் அருளாள அழகப்பெருமாள் என்பவறால் அமைக்கப்பெற்று...