தல வரலாறு
அருண்மிகு. கற்பக பெருமான் இரண்டு திருக்கரங்களோடு, அர்த்த பத்மாசனமிட்டு வலக்கையில் சிவபெருமானை தாங்கி ஜடாமுடியோடு மோன நிலையில் ஞான தவம் புரியும் சுயம்பு திருமேனியோடு காட்சி தருகிறார் முற்கால பாண்டியர்கள் குகைகோயில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த து. இக்கோயில் தொடர்ச்சியாக உள்ள 3 குன்றுகளில் 7 ஆவது குன்று எக்காட்டூர் கோன் பெருந்தட்சண் என்ற சிற்பியால் வடிக்கப்பட்டுள்ளது. உலகில் எங்கும் காண முடியாத திருமேனி கற்பக விருட்சமாக காட்சி அருளுகிறார். நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் 9 ஆவது பிரிவுகளில் ஒன்றாகிய பிள்ளையார்பட்டியில் நகரத்தார்களால் சிறப்பான முறையில் அவர்களின் குல கோயில்.