அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம் - 630709, சிவகங்கை .
Arulmigu Muthumariamman Temple, Thayamangalam - 630709, Sivagangai District [TM035826]
×
Temple History
தல வரலாறு
தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், தாயமங்கலத்தில் புல எண் 72 இல் கண்மாய் உள்வாயில் 16.27 சென்ட் பரப்பளவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், இத்திருக்கோயிலின் தற்போதைய பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களின் ஒருவரான முத்துச்செட்டியார், வியாபார நிமித்தமாக மதுரை சென்று வருவது வழக்கம். அப்படிச் சென்றதில் மதுரை மீனாட்சி அம்மனிடம் குழந்தை வரம் கேட்டு வருந்திய பின்பு வியாபாரம் முடித்து திரும்பி தாயமங்கலம் வரும்போது சின்னக்கண்ணனூர் காட்டில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அந்தக் குழந்தையைத் தூக்கி கொண்டு வரும்பொழுது தாயமங்கலம் ஊருணிக்கரையில் அந்தக் குழந்தை வைத்துவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்த்த போது குழந்தையைக் காணவில்லை. அதன் கவலையாக மனைவியிடம் தெரிவித்து விட்டு இரவு முழுவதும் தூக்கம்...தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், தாயமங்கலத்தில் புல எண் 72 இல் கண்மாய் உள்வாயில் 16.27 சென்ட் பரப்பளவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், இத்திருக்கோயிலின் தற்போதைய பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களின் ஒருவரான முத்துச்செட்டியார், வியாபார நிமித்தமாக மதுரை சென்று வருவது வழக்கம். அப்படிச் சென்றதில் மதுரை மீனாட்சி அம்மனிடம் குழந்தை வரம் கேட்டு வருந்திய பின்பு வியாபாரம் முடித்து திரும்பி தாயமங்கலம் வரும்போது சின்னக்கண்ணனூர் காட்டில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அந்தக் குழந்தையைத் தூக்கி கொண்டு வரும்பொழுது தாயமங்கலம் ஊருணிக்கரையில் அந்தக் குழந்தை வைத்துவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்த்த போது குழந்தையைக் காணவில்லை. அதன் கவலையாக மனைவியிடம் தெரிவித்து விட்டு இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்தபோது அம்மன் கனவில் வந்து நான் அந்த ஊருணியின் கள்ளிச்செடியில் இருக்கிறேன். என்னைக் கோயில் கட்டி வணங்கி வந்தால் உன்னையும் உன் பரம்பரையையும் காப்பாற்றுவேன். உனது பெயர் முத்து, என் பெயர் மாரி, முத்துமாரி என்று வணங்கி வரவும் எனக் கூறி மறைந்தது. அன்று முதல் அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். கோயில் கட்டிய முத்துச் செட்டியாரின் வாரிசுகள் பரம்பரையாக இத்திருக்கோயிலை நிர்வகித்து வருகின்றனர்.
புராண பின்புலம்
இந்த கோவிலில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமாவவதுடன், குழந்தை பிறப்பு மற்றும் திருமண பிராத்தனை அம்மன் அருளால் நிறைவேறி வருகிறதுஇந்த கோவிலில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமாவவதுடன், குழந்தை பிறப்பு மற்றும் திருமண பிராத்தனை அம்மன் அருளால் நிறைவேறி வருகிறது