தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், தாயமங்கலத்தில் புல எண் 72 இல் கண்மாய் உள்வாயில் 16.27 சென்ட் பரப்பளவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், இத்திருக்கோயிலின் தற்போதைய பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களின் ஒருவரான முத்துச்செட்டியார், வியாபார நிமித்தமாக மதுரை சென்று வருவது வழக்கம். அப்படிச் சென்றதில் மதுரை மீனாட்சி அம்மனிடம் குழந்தை வரம் கேட்டு வருந்திய பின்பு வியாபாரம் முடித்து திரும்பி தாயமங்கலம் வரும்போது சின்னக்கண்ணனூர் காட்டில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அந்தக் குழந்தையைத் தூக்கி கொண்டு வரும்பொழுது தாயமங்கலம் ஊருணிக்கரையில் அந்தக் குழந்தை வைத்துவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்த்த போது குழந்தையைக்...