Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில், பரமக்குடி, Paramakudi - 623707, இராமநாதபுரம் .
Arulmigu Meenakshi Sundareshwarar Matrum Muthalamman Temple, Paramakudi - 623707, Ramanathapuram District [TM035827]
×
Temple History

தல வரலாறு

பரமக்குடி ஆயிர வைசிய குல மஞ்சப்புத்தூர் சைவ வைஷ்ணவ செட்டியார்களுக்குப் புராதனப் பாத்தியமான அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு பிரம்பு அடர்ந்த காடாகவும், கடம்ப மரங்கள் நெருங்கி வளர்ந்த வனமாகவும் பரமக்குடி திகழ்ந்தது. இப்பகுதியைப் பாம்பூர் தும்பிச் சங்கை நாயக்கர் என்னும் சிற்றரசர் ஆண்டு வந்தார். அவர் நாள்தோறும் குதிரையில் சென்று மதுரை ஸ்ரீ மீனாட்சி அன்னையையும், ஸ்ரீ சுந்தரேசப் பெருமானையும் வழிபட்டு வருவது வழக்கம். அதன் பின்னரே உணவு கொள்வார். வயதாகி முதுமைப்பருவம் அடைந்த காலத்தில் அவரால் மதுரை செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அம்மையப்பர் தரிசனமின்றி உணவு கொள்வதை மறுத்தார் அவர். அன்றிரவு ...

தல பெருமை

முத்தால பரமேஸ்வரி மிகவும் கருணை வாய்ந்தவள். கஷ்டப்படும் மனிதர்கள் எவராயினும் தம்மிடம் வந்து முறையிடுவோருக்கு அருளை வாரி வழங்குவதில் அவளுக்கு நிகர் அவளே குழந்தை வரம், வேலை வேண்டுவோர், திருமண பாக்கியமின்மை என எக்குறையுடன் வந்தாலும் பரிபூரண அனுக்ரகம் செய்வாள். அம்மை நோய் கண்டவர்கள் அம்பாளின் அபிஷேகப் பிரசாதம் அருந்த, ஒரே வாரத்தில் குணம் நிச்சயம். முத்துக்கோர்த்த புத்திசாலிப்பெண்ணால் ஏற்பட்ட ஆலயம் இது என்பதால், இந்த அம்மனை வழிபடும் மாணவ மாணவியர் மிகவும் புத்திக்கூர்மை அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஊரின் காவல் தெய்வமாக இருக்கும் இந்த அம்மனை நினைத்து எந்தக் காரியத்தை வேண்டினாலும், அது குறைவின்றி நிறைவேறும். வாரம்...