Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், - 623532, இராமநாதபுரம் .
Arulmigu Aadhijeganathaperumal Temple, Thiruppullani - 623532, Ramanathapuram District [TM035899]
×
Temple History

தல பெருமை

புல்லவர் காலவர் கண்வர் என்ற மூன்று ரிஷிகளின் தவத்திற்கு இணங்கி இத்திருத்தலத்தில் ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் அவதரித்தார் ஸ்ரீ ராமாயண காலத்தில் தசரத மஹாராஜா தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இத்திருத்தலத்திற்கு வந்து இப்பெருமானை வழிபட்ட பின்னர் ஸ்ரீ ராமன் பரதன் லட்சுமணன் சத்ருக்கனன் பிறந்ததாக ஐதீகம் ராமர் சயன திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் 108 திவ்ய தேசங்களில் நாற்பத்தி நான்காவது திவ்ய தேசமாக திகழ்கின்றது திருமங்கை ஆழ்வாரால் 20 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது ...

இலக்கிய பின்புலம்

1)திருமங்கை ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளிய பெரிய திருமொழி (9ம் பத்து 3, 4 வது பதிவம்) 2)ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்திரத்தினக் குறிப்பு 3)ஸ்ரீ வேதாந்த தேசிகர் நூல்குறிப்பு. வடமொழியில் உள்ள தயா சுதகத்தில் 79வது செய்யுள் ஸ்ரீதசாவதார ஸ்தோத்திரம் 8வது செய்யுள் ஸ்ரீ ரகுவீரகத்யம் 52, 54, 69 வரிக் குறிப்பு ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸத்தில் 25வது செய்யுள் மற்றும் பல நூல்கள். 4)சேதுபதி சமஸ்தான மகாவித்வான் முத்தமிழ்க்கடல் ஸ்ரீமத் உ.வே.ரா.ராகவய்யங்கார் ஸ்வாமி இயற்றிய சேது நாடும் தமிழும்

புராண பின்புலம்

புத்திரப்பேறு இல்லாதவா்கள் இத்தலத்தில் உள்ள த்லவிருட்சம் அசுவத்தமரம் (அரசமரம்) 12 சுற்றுகள் (பிரதட்சணம்) சுற்றி நாகப்பிரதிஷ்டை செய்து நிவேதனம் செய்த திருகன் அமுதினை (பால்பாயாசம்) அருந்தினால் புத்திரப்பேறு கிடைப்பது பிரசித்தம்.