ஸ்ரீய - பதியான ஸ்ரீமந் நாராயணன் காட்சிக்கு எளியனாய் கருத்துக்கு இனியனாய் இன்சொலால் ஈரம் அளைபடிறு இலமாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்ற பொய்யா மொழிக்கிணங்க தமிழ்நாடு மாநிலம், இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருப்புல்லாணியில் ஆழ்வார்களின் ஈரச்சொற்பட்டு 108 வைணவ திவ்ய தேசங்களில் ஈரொன்பதாம்பாண்டி என்ற படி இப்பாண்டி நாட்டில் 18 திருப்பதிகள் உள்ளன. இப்பதினெட்டில் ஆவது திவ்யதேசமாக விளங்குவதும் திருப்புல்லாணி தர்ப்பசயனம் புல்லாரண்யம், திருவணை, மற்றும் ஆதிசேது என்ற திருநாமங்களால் குறிக்கப்பெறுவதுமாகிய இப்பழம்பதி இராமநாதபுரத்திற்கு தெற்கே 9 கி.மீ தொலைவிலும் தென்சமுத்திரகரைக்கு வடக்கே 4 கி.மீ தொலைவிலும், திருஉத்தரகோசமங்கைக்க் கிழக்கே 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ...