Screen Reader Access     A-AA+
அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில், Thiruuthirakosamangai - 623533, இராமநாதபுரம் .
Arulmigu Mangalanathaswami Temple, Thiruuthirakosamangai - 623533, Ramanathapuram District [TM035905]
×
Temple History

தல பெருமை

பாண்டிய நாட்டில் உள்ள தலம். மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும் சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் இலவந்திகைப் பள்ளி என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது. உத்தரம் - உபதேசம் கோசம் - ரகசியம் மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம்...

இலக்கிய பின்புலம்

மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம், அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது. அவர் தன் முற்பிறவில் இங்கு அவதரித்து , சிவபெருமான் கட்டளைப்படி வேதாகமப் பொருளை இந்த உலகிற்கு தந்து, அடுத்த பிறவியில் மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்து, இங்கு வந்து மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே என திருவாசகத்தால் பாடியிருப்பது இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பாகும். சிவாலயங்களில் பள்ளியறை பூஜை நடக்கும்போது பாடப்படும் திருப்பொன்னூஞ்சல் பாடல், மாணிக்கவாசகரால் இக்கோயிலில் பாடப் பட்டதாகும். இதில் உள்ள ஒன்பது பாடல்களிலும் திருஉத்தரகோசமங்கைக்கு அரசே என்று தான் பாடப்பட்டுள்ளது. இதில் இருந்து ஏதேனும் ஒரு பாடலை தான் அனைத்து சிவாலயங்களிலும் பள்ளியறை பூஜையில் பாடப்படுகிறது. அருணகிரியாரும் இத்தலத்தை பற்றி பாடல்களை பாடியுள்ளார்.