தல வரலாறு

பாட்டரசன்கம்பன் புகழ் மணக்கும் நாட்டரசன்கோட்டை சித்து விளங்கும் தெய்வத்திருத்தலம் சக்தி தலம் வாட்டமெல்லாம் போக்கி வாழ்வளிக்கும் மாதரசி கண்ணுடையாள் அருளாட்சி செய்யும் மாண்புடைய தலம், வரலாறு நாட்டரசன்கோட்டை அடுத்த பிரண்டைக்குளம் என்னும் சிறுகிராமத்திலிருந்து நாட்டரசன்கோட்டைக்கு பால் கொண்டுவரும் யாதவ குலத்தவர் காலை தட்டிவிடுவது ஒரு கல்லின் வழக்கம், ஒரு நாள் ஆத்திரத்துடன் மண்வெட்டியால் அக்கல்லை தோண்டும் போது பீரிட்ட குருதிவெள்ளம் ஞானக்கண்ணுடையோர்க்கு கண்ணுடையாளாக காட்சி அளித்து அக்கண்ணுடையாளை மலையரசன் தன மகளாக பாவித்து காவல்காத்தும் அக்கண்ணுடையாளுக்கு மகிபாலன் மூலஸ்தானம் ஏற்படுத்தி அருட்கோயிலாக காட்சியளித்ததாக மரபு, கண்ணுடையாள் பிரண்டகுளத்தை நோக்கி திரும்பி பார்த்த .டம் ஞாயமாகுளமாக களியாட்டத்தின்போது பலிபீடமாக தற்போதும் காட்சியளிக்கிறது,