Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், Kalaiyarkovil - 630551, சிவகங்கை .
Arulmigu Sornakaleeswarar Temple, Kalaiyarkovil - 630551, Sivagangai District [TM035986]
×
Temple History

தல வரலாறு

மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மும்மைமச்சிறப்பகளும் கொண்டது, கானப்பேர் எயில் என்று அழைக்கப்பட்டதும் மார்பன் என்ற வீரம் செறிந்த மன்னனின் கோட்டை இருந்ததுமான இத்திருத்தலத்தில் இறை அடியார்களுக்கு அடைக்கலமான பெருஅரன் மதில் சூழ்ந்த ஆலயம் மூன்று முக்கிய திருக்கோயில்களை ஒன்றாக்கி உள்ளடக்கியது, உமாதேவியாருக்காக பிரத்யட்சமான சுயம்பு லிங்க திருமேனி இத்திருக்கோயிலில் வருணனால் பூசிக்கப்பட்ட வருண லிங்கம் உள்ளது,