Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிறகிலிநாதசுவாமி திருக்கோயில், Kandadevi - 630314, சிவகங்கை .
Arulmigu Sirakilinatha Swamy Temple, Kandadevi - 630314, Sivagangai District [TM036050]
×
Temple History

தல வரலாறு

சீதையை தேடிவரும் ராமபிரானிடம் சடாயு என்ற கழுகு சீதை ராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது, கண்டேன் தேவியை ராவணனுடன் சீதையை மீட்க போராடியது அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி கீழே வீழ்த்தி சென்றான், குற்றுயுரான சடாயு ஸ்ரீராமனின் மடியில் கிடந்து சேதிகள் சொல்லி நிறைவை அடைந்தது, தன் தந்தைக்கு செய்தது போல இராமபிரான் பிதிர்கடன் செய்தார், சடாயுவின் ஆன்மா பரிபூரணமடைந்து மகாலிங்க திருமேனி தாங்கியது, சிறகு இல்லாததால் சிறகிலிநாதர் என அழைக்கப்பட்டது, வடமொழியில் சிறப்பு வழக்காக பொன்மயமான இறகு உடையவர் என்ற பொருளில் சொர்ணபர்னேஸ்வரர் என்று பர்னம் இறகு அழைக்கப்பட்டு காலவழுவில் சொர்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்,