Screen Reader Access     A-AA+
அருள்மிகு காசிவிசுவநாதசுவாமி திருக்கோயில், Tenkasi - 627811, தென்காசி .
Arulmigu Kasiviswanathaswamy Temple, Tenkasi - 627811, Tenkasi District [TM037880]
×
Temple History

தல வரலாறு

தலவரலாறு அரிகேசரிபராக்கிரமபாண்டியன் முருகப்பெருமான் அருளால் பெற்ற ககனகுளிகையை வாய்க்குள் அமைத்துக்கொண்டு யார்க்கும் தெரியாமல் வானில்பறந்து காசிக்குச்சென்று காசிவிசுவநாதரை வழிபட்டு சூரியன்உதிக்கும் முன்னர் கோட்டைக்குத் திரும்பிவிடுவார். ஒருசமயம் காசிக்குசென்ற அரிகேசரிபராக்கிரமபாண்டியன் கொண்டுவந்த லிங்கம் அவர் இளைப்பாரிய இடத்தில் இருந்து எடுக்க இயலவில்லை. அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஸ்டை செய்து அதற்கு சிவகாசி என்று பெயரிட்டனர். மேற்படி மன்னர் கோட்டைக்கு வந்து மிகுந்தகவலையுடன் இருந்தபோது சிவபெருமான் கனவில்தோன்றி மன்னர் அரண்மனையிலிருந்து, கட்டெறும்பு வரிசையாக ஊர்ந்து எங்கு முடிவடைகிறதோ அந்த இடத்தில் லிங்கம் தோன்றும் ,அந்த இடத்தில் சிவலிங்கத்தை தெய்வீககாட்சியாக கண்டறிந்தார். மேற்படிஇடத்தில் 06.05.1446 ல் கால்கோல் விழா நடத்தி 10.06.1447 ல் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்தார் அதன்பின்னர் மன்னர் பராக்கிரமபாண்டியன் இராஜகோபுரம் கட்ட 30.11.1457 ல் ஆரம்பிக்கப்பட்டு...