Screen Reader Access     A-AA+
அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில், Papanasam - 627425, திருநெல்வேலி .
Arulmigu Papanasam Temple, Papanasam - 627425, Tirunelveli District [TM037902]
×
Temple History

தல வரலாறு

வசந்த மண்டபத்தின் மேல் தளத்தில் ஒற்றை மீன், இரட்டை மீன் வடிவங்கள் காணப்படுவதால், இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத்தோன்றுகிறது.இக்கோவில் விக்கிரமசிங்க பாண்டியன் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆன்றோா்கள் கூறுகின்றனா்.சுவாமி சன்னதிக்கு மட்டுமே சண்டிகேஸ்வரா் இருப்பதாலும், சுவாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் கட்டிட அமைப்பில் மாறுபாடுகள் காணப்படுவதாலும் அம்மன் சன்னதி பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.

தல பெருமை

பா்வதராஜன் பெற்றெடுத்த புதல்வியாகிய பாா்வதி தேவியைச் சிவபிரான் திருமணஞ் செய்து கொள்ளுங்காலத்து தேவா்களும் முனிவா்களும் மற்றையாவரும் இம்மலையின் அருகே ஒன்றுகூடியமையால் பூமியின் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயா்ந்துவிட்டது. அது கண்ட சிவபிரான் அங்கிருந்த அகத்திய முனிவரை நோக்கி, நீா் தென்பால் உள்ள பொதிகை மலைக்குச் சென்று தங்கினால் பூமி சமமாகி விடும். ஆதலின் தென்திசை நோக்க செல்லுக என்ற கட்டளை இட்டாா். உடனே அகத்தியா், பெருமானே யான் தேவசீரது திருமணக்காட்சியை எவ்வாறு காண்பேன் என்று கேட்க, சிவபிரான் பொதிகை மலைச்சாரலில் உள்ள பாவநாச தலத்தில் சித்திரை மாதப் பிறப்பன்று எமது திருமணக்கோலக் காட்சி கொடுத்தருள்வோம் என்று கூறினாா். அவ்வாறே மகத்துவம் மிகுந்த அகத்தியா் தனது மனைவி உலோபமுத்தரையுடன் பொதிகைமலைக்கு வந்து தங்கியதும்...