பாபநாசம் : இத்தலம் தன்னை வந்தடைந்தாரது பாவங்களை நாசம் செய்ய வல்லது ஆதலின் பாவநாசம் எனப்பெயர் பெற்றது. இட அமைப்பு : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலைச் சாரலின் கீழ் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமாகும். இது திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் உள்ள அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. கோவில் அமைப்பு : இக்கோவில் தாமிரபரணி நதிக்கரையின் கிழக்கு முகமாக அழகுற அமைந்துள்ளது. இக்கோவில் விக்கிரமசிங்கபாண்டியன் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், ஏறக்குறைய...