தல வரலாறு
ஆதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் வில்வ மரத்தடியில் அருள்மிகு செல்வவிநாயகர் சன்னதி மட்டுமே அமைந்திருந்தது. பிற்காலத்தில் மேற்படி சிந்துபூந்துறை கிராமத்தில் சிவாலயம் இல்லாததால் மேற்படி ஸ்ரீ செல்வ விநாயகர் சன்னதி மேல்புறம் தெற்கில் ஸ்ரீ மீனாசஷி அம்பாள் சன்னதியும். வடக்கு பகுதியில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சன்னதியும் பிற்காலத்தில் இதர சன்னதிகளம் அமைய பெற்றுள்ளது. இத்தலம் மதுரை ஸ்ரீ மீனாசஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வழிபாட்டின் சிறப்பு பெற்றது. மேற்படி ஆலயத்தின் இணைப்பு கோயிலான அருள்மிகு விசுவநாத செல்வியம்மன் திருக்கோயில் மேற்படி ஆலயத்தின் வடகிழக்கே சுமார் 2 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. மேற்படி ஆலயம் முதற்காலம் முதல் கிராம தேவதையாக அருள் பாலித்து சிறப்பு பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.