மதுரை ரோடிலிருந்து கிழக்கு நோக்கி சிந்துபூந்துறை செல்லும் சாலையின் அருகில் வடக்குப் பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோவி்ல் முன்புறமுகப்புவாயிலின் சாலாகாரம் அமைந்துள்ளது. அடுத்து மகா மண்டபத்தின் இடதுபுறம் அனுக்ஞை விநாயகர் சன்னதி உள்ளது. அம்மண்டபத்தை அடுத்து அமைந்துள்ள மணி மண்டபத்தின் நடுவில் ஸ்ரீ செல்வ விநாயகர் சன்னதி உள்ளது. அம்மண்டபத்தை அடுத்து அமைந்துள்ள மணி மண்டபத்தில் நடுவில் ஸ்ரீ செல்வ விநாயகர் சன்னதியும் வடபுறம் தெற்கு நோக்கி ஸ்ரீ நடராசர் சன்னதியும், தென்புறம் வடக்கு நோக்கி சமயக் குரவர் நால்வர் மற்றும் சேக்கிழார் சன்னதியும், அமைந்துள்ளது. மேற்படி மண்டபத்தினை அடுத்து தெற்கு பகுதியில் ஸ்ரீ மீனாசஷி அம்மாள் சன்னதியும் கிழக்கு நோக்கி...