Arulmigu Chinthamaninatha Swamy Temple, Vasudevanallur - 627758, Tenkasi District [TM038059]
×
Temple History
தல வரலாறு
பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டுமே வணங்கி வருபவர். ஒரு நாள் கயிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் அமர்ந்திருக்கும்போது, பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வண்டு வடிவம் கொண்டு, சிவனை மட்டும் சுற்றி வந்தார்.பார்வதி தேவி சினம் பொங்க, முனிவர் தன்னை அவமதித்தார் என்று கூறி வெகுண்டாள். சிவபெருமான், சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதை உலகறியச் செய்ய உளம் கொண்டார். இதை உலகிற்குக் காட்டிட, பார்வதி தேவி பொதிகை மலைச் சாரலுக்கு வந்து இந்த வனத்தில்(புளியங்காடு) புளிய மரத்தடியில் (சிந்தை மரத்தடியில்) இலிங்கத்தை நிறுவிபூஜைகள் செய்து வழிபட்டு தவம் செய்து வந்தார். சிவபெருமான் பார்வதியின் தவத்தினைக் கண்டு மகிழ்ந்து காட்சி கொடுத்து சக்தி கேட்ட...பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டுமே வணங்கி வருபவர். ஒரு நாள் கயிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் அமர்ந்திருக்கும்போது, பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வண்டு வடிவம் கொண்டு, சிவனை மட்டும் சுற்றி வந்தார்.பார்வதி தேவி சினம் பொங்க, முனிவர் தன்னை அவமதித்தார் என்று கூறி வெகுண்டாள். சிவபெருமான், சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதை உலகறியச் செய்ய உளம் கொண்டார். இதை உலகிற்குக் காட்டிட, பார்வதி தேவி பொதிகை மலைச் சாரலுக்கு வந்து இந்த வனத்தில்(புளியங்காடு) புளிய மரத்தடியில் (சிந்தை மரத்தடியில்) இலிங்கத்தை நிறுவிபூஜைகள் செய்து வழிபட்டு தவம் செய்து வந்தார். சிவபெருமான் பார்வதியின் தவத்தினைக் கண்டு மகிழ்ந்து காட்சி கொடுத்து சக்தி கேட்ட நாமிருவரும் சரிபாதியாகஇணைந்திருக்க வேண்டும் என்ற வரத்தை வழங்கி அம்மனை இட பக்கத்தில் கொண்டு, சிவனும் சக்தியும் ஒன்றே என்ற உண்மையை முனிவருக்கும் உலகிற்கும் உணர்த்தி அர்த்தநாரிஸ்வரராக காட்சி தந்தார்.
தல பெருமை
பிருங்கி முனிவர் பொதிகமலை சாராலுக்கு வந்து இந்த வனத்தில் புளீயமரத்தில் லிங்கத்தை நிருவி பூஜைகள் செய்து வழிபட்டு தவம் செய்து வந்தார். அவருக்கு சிவனும் சக்தியும் ஒன்று என்ற உண்மையை உணர்த்த அர்த்தநாரிஸ்வரராக காட்சி அளிக்கிறார்.பிருங்கி முனிவர் பொதிகமலை சாராலுக்கு வந்து இந்த வனத்தில் புளீயமரத்தில் லிங்கத்தை நிருவி பூஜைகள் செய்து வழிபட்டு தவம் செய்து வந்தார். அவருக்கு சிவனும் சக்தியும் ஒன்று என்ற உண்மையை உணர்த்த அர்த்தநாரிஸ்வரராக காட்சி அளிக்கிறார்.
புராண பின்புலம்
தேவலோக இந்திரன் ஐராவதத்தின் மீது பவனிவர அப்போது துர்ருவாச முனிவர் இந்திரனிடம் தான் செய்த சிவபூஜை மலர் ஒன்றை கொடுக்க அதை பெற்ற இந்திரன்ஐராவதத்தின் தும்பிக்கையில் கொடுக்க வெள்ளை யானை அப்பூஜை மலரை காலில் போட்டு மிதிக்க அதைக்கண்ட முனிவர் கோபம் கொண்டு சபிக்க இந்திரன் துர்ருவாச முனிவர் விட்ட சாபம் நீங்கிட முனிவரை வேண்ட மனமுருகிய முனிவர் பாபவிமோசனம் பெற வழி பொதிகைமலை அருகில் உள்ள சிந்தை வனத்தில் ( புளியமரக் காட்டில் ) அர்த்தநாரிஸ்வரருக்கு திருக்கோயில் கட்டி வழிபட துன்பம் தீரும் எனக்கூறினார். உடனே இந்திரனும் தன் ஐராவத வெள்ளை யானையுடன் பூலோகம் வந்து நித்சேப நதியில் நீராடி இறைவனுக்கு ஆலயம் எழுப்பி சாப விமோசனம் பெற்றார். அதனால் இவ்வூர்...தேவலோக இந்திரன் ஐராவதத்தின் மீது பவனிவர அப்போது துர்ருவாச முனிவர் இந்திரனிடம் தான் செய்த சிவபூஜை மலர் ஒன்றை கொடுக்க அதை பெற்ற இந்திரன்ஐராவதத்தின் தும்பிக்கையில் கொடுக்க வெள்ளை யானை அப்பூஜை மலரை காலில் போட்டு மிதிக்க அதைக்கண்ட முனிவர் கோபம் கொண்டு சபிக்க இந்திரன் துர்ருவாச முனிவர் விட்ட சாபம் நீங்கிட முனிவரை வேண்ட மனமுருகிய முனிவர் பாபவிமோசனம் பெற வழி பொதிகைமலை அருகில் உள்ள சிந்தை வனத்தில் ( புளியமரக் காட்டில் ) அர்த்தநாரிஸ்வரருக்கு திருக்கோயில் கட்டி வழிபட துன்பம் தீரும் எனக்கூறினார். உடனே இந்திரனும் தன் ஐராவத வெள்ளை யானையுடன் பூலோகம் வந்து நித்சேப நதியில் நீராடி இறைவனுக்கு ஆலயம் எழுப்பி சாப விமோசனம் பெற்றார். அதனால் இவ்வூர் முனிவரின் பெயராலேயே எனப் பெயர் பெற்று பின்னர் வாசுதேவநல்லூர் என்று ஆயிற்று எனக் கூறுவர்.