தல பெருமை
இத்தலம் ஸ்ரீராமர் வழிபட்ட ஸ்தலம் ஆகும். ஸ்ரீராமர் வனவாசத்தின் போது ராவணணால் துக்கிச் செல்லப்பட்ட சீதையை தேடி ஸ்தலத்திற்கு ராமர் வந்த போது புன்னை மரத்தின் அடியின் கீழ் உள்ள இத்தலத்து இறைவன் லிங்க வடிவில் ஸ்ரீராமருக்கு காட்சி கொடுத்து ராமர் விரைவில் சீதையை மீட்பாய் என சத்தியவாக்கு அளித்ததால் இங்குள்ள இறைவன் பெயர் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரா என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமர் இறைவன் அளித்த வாக்கின்படி சீதையை மீட்டு, சீதையுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி பேருபெற்றாய் என புராணங்கள் குறிப்பிடுகிறது.