இத்திருக்கோயில் மன்னரால் கட்டப்பட்டது. இவன் சேரன் பிற்காலத்தில் மதுரை நாயகர் மன்னர்களால் மதுரை மீனாட்சி சொக்கர் சந்நிதியும் தோரன வாசலும் கொடிபிரமன்டபமும் எழுப்பப்பட்டதாக தொரிகிறது. மெய்யன்பார்களால் “பொரிய கோவில்“ என்று அழைக்கப்படும் அளவிற்கு 631 அடி நீளமும் 293 அடி அகலமும், ஒன்பது அடுக்குகள் அடங்கிய 135 அடி உயர பொரிய கோபுரமும் உடையது. அகன்ற உள்மாட வீதியும் பொற்றாமரை மனமும் உள்ளடங்கியது. சுவாமி சந்நிதியில் உள்ள மணிமன்டபம் தமிழார்களின் கட்டிட கலைக்கு முத்தாப்பாக அமைந்துள்ளது. இம் மணி மண்டபம் 16 துண்களால் தாங்கப்பட்டு ஒவ்வொரு தூணிலும் 32 தூண்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசைகள் ஒலிக்கின்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.