அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குருங்குடி - 627115, திருநெல்வேலி .
Arulmigu Alagiya Nambirayar Temple, Thirukurungudi - 627115, Tirunelveli District [TM038106]
×
Temple History
தல பெருமை
திருக்குறுங்குடி ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திருத்தலங்களில் 57வது திருத்தலமாகும்.திருக்குறுங்குடி நம்மாழ்வார் ,திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகிய நான்கு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் மகேந்திரகிரிநாதர் எனற சிவஆலயம் உள்ளே அமைந்துள்ளது. நம்பாடுவான், பிரம்ம ராட்சசன் என்பவருக்கு மோட்சம் கொடுத்த ஸ்தலம், வடிவழகிய நம்பி ஆழ்வார்திருநகரில் நம்மாழ்வராக அவதரித்தார்.தல விருட்சம் பனை மரம் பிரம்ம ராட்சசன் பெருமாளிடம் மோட்சம் பெற்று பனைமரமாக இத்திருக்கோவிலில் அவதரித்தார்.இந்த மரத்தில் பூப்பூக்கும்,காய் காய்க்கும் கனி ஆகாது. தல தீர்த்தம் திருப்பாற்கடல் ,இந்த தீர்த்தம் சிந்து நதிக்கரையில் உள்ளது.ஆகமம் வைகானசம் ஆகும். மூலவரின் திருநாமம் ஓம் நமோ நாராயணா.
திருக்கோவில் வரலாறு:
வாமனராக வந்த பெருமாள் நின்று அருள் புரிந்த தலம் இது....திருக்குறுங்குடி ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திருத்தலங்களில் 57வது திருத்தலமாகும்.திருக்குறுங்குடி நம்மாழ்வார் ,திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகிய நான்கு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் மகேந்திரகிரிநாதர் எனற சிவஆலயம் உள்ளே அமைந்துள்ளது. நம்பாடுவான், பிரம்ம ராட்சசன் என்பவருக்கு மோட்சம் கொடுத்த ஸ்தலம், வடிவழகிய நம்பி ஆழ்வார்திருநகரில் நம்மாழ்வராக அவதரித்தார்.தல விருட்சம் பனை மரம் பிரம்ம ராட்சசன் பெருமாளிடம் மோட்சம் பெற்று பனைமரமாக இத்திருக்கோவிலில் அவதரித்தார்.இந்த மரத்தில் பூப்பூக்கும்,காய் காய்க்கும் கனி ஆகாது. தல தீர்த்தம் திருப்பாற்கடல் ,இந்த தீர்த்தம் சிந்து நதிக்கரையில் உள்ளது.ஆகமம் வைகானசம் ஆகும். மூலவரின் திருநாமம் ஓம் நமோ நாராயணா.
திருக்கோவில் வரலாறு:
வாமனராக வந்த பெருமாள் நின்று அருள் புரிந்த தலம் இது. எம்பெருமான்வராக அவதாரம் எடுத்த போது, தேவியின் விருப்பத்துக்கு ஏற்ப, அச்சம் தரும் வராக உருவத்தை மாற்றிக்குறுகி நின்ற தலம் இது. ஆகவேகுறுங்குடிஆனதுஎன்பர்.
திருக்குலத்தைச் சேர்ந்த நம்பாடுவானுக்கு அழகிய நம்பிராயர் பெருமாள் தரிசனம் தர ஏதுவாகக் கொடிமரம் விலகி வழி விட்டதும் இங்கு தான். இன்றும் இந்தக் கோயிலில் கொடி மரம் விலகியே உள்ளதைக் காணலாம்.
கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி திதியில் கைசிக ஏகாதசியின் மகத்துவத்தினை உணர்த்தும் வகையில் நம்பாடுவானுக்கு அருள் செய்தார் அழகிய நம்பிராயர்.
2) அருள்மிகு திருமலை நம்பி திருக்கோயிலின் தலவரலாறு:
திருமலைநம்பி திருக்கோவில் பசுமை விரித்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைமுகட்டில் மேகக் கூட்டங்களின் நடுவில் நம்பினோரைக் கைவிடேன் என்று கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் திருமங்கையாழ்வார் கட்டியது. ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக தங்கிய இடம் இந்த மலை என்று கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மனத்துக்கு ரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் சென்றதும், மலைப்பாதை தொடங்குகிறது. மேடும், பள்ளமுமாக இந்த மலைப்பாதை பார்ப்பதற்கு கடினமான தோற்றம் கொண்டிருந்தாலும் மலைக் காடுகளின் பசுமை வாசனையும், குளுமையான மூலிகைக் காற்றும் மலையேறுவோருக்கு கொஞ்சமும் கூட சோர்வையோ, களைப்பையோ அளிப்பதில்லை. அந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பிரதேசம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ளச்செய்கிறது
கோடையில் ஈர்க்கும் நம்பி கோடைகாலங்களில் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற புகழ் பெற்ற மலைபகுதிகளுக்கு செல்லவே விருப்பம் தெரிவிப்பார்கள். அந்த வகையில்ஆன்மீகரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்யவரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகம். தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து இந்த கோவிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
மலைக்கோவிலில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்க பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டுவது வழக்கம். அனால், பெரியவர்கள் அவ்வளவு எளிதாக இந்த மலைமீது ஏறிச்செல்ல சிரமப்படுவதால் அவர்களுக்காகவே கீழ்கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக 8 பேர் வரை பயணம் செல்லலாம். நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிலபேர் மலையடிவாரம் வரை சென்று காட்டு பாதை வழியே நடந்தே மலை நம்பி கோவிலுக்கு செல்வர்.
நம்பி மலைக்கு வரும் பயணிகள் இரண்டு வகையான பலனை அடைகின்றனர். மலை மேல் உள்ள நம்பியாண்டவரை தரிசித்தும், அருவியில் குளித்த ஆனந்தத்தையும் பெறுகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தப்பகுதிகள் இருந்தாலும் தேவையற்ற கெடுபிடிகள் இல்லாத சுற்றுலாத்தலமாகவே உள்ளது. மலையில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் மூலிகை கலந்து வருவதால் சோப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.