Screen Reader Access     A-AA+
அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில், தேரிக்குடியிருப்பு - 628205, தூத்துக்குடி .
Arulmigu Karkuvel Ayyanar Temple, Therikudieruppu - 628205, Thoothukudi District [TM038189]
×
Temple History

தல வரலாறு

திருச்செந்தூாிலிருந்து சுமார் பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் உயர்ந்த செம்மண் குன்றுகளாகப் பரந்து விரிந்து காட்சி தரும் செம்மண் தேரிகள், தெண்பாண்டி நாட்டிற்கு அழகு தருவனவாகும். குதிரை மொழி தேரியிருக்கும் பகுதி பழங்காலத்தில் மானாடு, மானவீரவளநாடு என்றும் அழைக்கப்பட்டது. குதிரை மொழி தேரியிலுள்ள எள்ளுவிளை என்ற ஊரில் உள்ள கல்தூணில் அய்யனார் முதன் முதலில் அமர்ந்து காட்சி தருகிறார். பின்னா் அய்யனார் தேரியின் மேற்கு பகுதியில் நடுவில் ஒரு சிறிய கட்டுமான கோயிலில் அமர்ந்து காட்சி தந்தார். தற்போது அந்த இடத்தில் இருந்து மூன்று மைல் கிழக்கே சமதளப்பகுதியில் சோலை சூழ்ந்த இடத்தில் எழுந்தருளி பூரணம், பொற்கலை அம்மாளுடன் காட்சி தருகிறார். இத்திருக்கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு...

தல பெருமை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் குலதெய்வ வழிபாடு கொண்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திருச்செந்தூரில் இருந்து சுமார் 15 கிலோ மிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலை சுற்றி தேரி மணல் காணப்படும். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரதித்து பெற்று ஆகம். கள்ளர் வெட்டு நடைபெறும் இடத்தில் இருந்து புனித மணல் எடுத்து வீட்டில் பூஜை அறையில் வைத்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.