அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில், Thoothukudi - 628002, தூத்துக்குடி .
Arulmigu Sankararameshwarar Temple, Thoothukudi - 628002, Thoothukudi District [TM038193]
×
Temple History
தல பெருமை
சீலம் சேர் திருமந்திரநகர் எனச் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்புடையதாகும். இத்திருக்கோயில் தென்பாண்டி திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாகும். இங்கு எழுந்தருளி இருக்கின்ற சுவாமி சங்கரராமேஸ்வரர் எனவும் அன்னை பாகம்பிரியாள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இத்திருக்கோயில் அமையபெற்றமைக்கு செவி வழிச் செய்திகள் ஒன்று கூறப்படுகிறது. முருகப்பெருமானின் திருமணத்தை கண்டு களிக்க செல்லும் வழியில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ள பசுமையான சோலையில் தங்கியிருந்த சுவாமிகளிடம் அன்னை உமாதேவி வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை அருளுமாறு வேண்டினாள்.
மந்திரம் ஓத கடல் அலையின் பேர் இரைச்சலும் பனை மரங்களின் ஓலை ஓசையும் மண்பாண்டம் செய்வோரின் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூராக இருந்ததை சிவபெருமான் நிறுத்தி அன்னைக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்து...சீலம் சேர் திருமந்திரநகர் எனச் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்புடையதாகும். இத்திருக்கோயில் தென்பாண்டி திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாகும். இங்கு எழுந்தருளி இருக்கின்ற சுவாமி சங்கரராமேஸ்வரர் எனவும் அன்னை பாகம்பிரியாள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இத்திருக்கோயில் அமையபெற்றமைக்கு செவி வழிச் செய்திகள் ஒன்று கூறப்படுகிறது. முருகப்பெருமானின் திருமணத்தை கண்டு களிக்க செல்லும் வழியில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ள பசுமையான சோலையில் தங்கியிருந்த சுவாமிகளிடம் அன்னை உமாதேவி வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை அருளுமாறு வேண்டினாள்.
மந்திரம் ஓத கடல் அலையின் பேர் இரைச்சலும் பனை மரங்களின் ஓலை ஓசையும் மண்பாண்டம் செய்வோரின் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூராக இருந்ததை சிவபெருமான் நிறுத்தி அன்னைக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசித்து அருளினார். எனவே இவ்வூர் திருமந்திரநகர் என அழைக்கப்படலாயிற்று. இந்த இடத்தில் காசிபமுனிவர் என்பவர் சிவலிங்கத்தை நிறுவி அனைவரும் வழிபட செய்தார். இம்மூர்த்தியை சங்கரராமபாண்டியன் என்னும் குறுநில மன்னன் வழிபட்டு மக்கட்பேறு பெற்றதால் இத்திருக்கோயில் புத்திரபாக்கியஸ்தலமாக வரலாறு கூறுகிறது.