Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார்திருநகரி - 628612, தூத்துக்குடி .
Arulmigu Athinathar Alwar Temple, Alwarthirunagari - 628612, Thoothukudi District [TM038199]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு: 1.மூலவர் ஆதிநாதர் தலவரலாறு: முற்காலத்தில் படைக்கும் தொழிலை செய்து வந்த நான்முகனாகிய பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் செய்ய சிறந்த இடத்தை பூலோகத்தில் தேடினார். அதற்குரிய இடத்தை கூறும்படி மகாவிஷ்ணுவிடமே வேண்டினார். அதற்கு மகாவிஷ்ணுவும், நான்முகனாகிய உன்னை நான் படைக்கும் முன்பே பூலோகம் தாமிரபரணி ஆற்றின்கரையில் யாம் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளோம், அந்த இடமே உம் தவத்திற்கு ஏற்ற இடம் என்று கூறி புன்முறுவல் புரிந்தார். பிரம்மனும் பூலோகம் அடைந்து தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள தற்போதைய ஆழ்வார்திருநகரி பகுதிக்கு வந்து மகாவிஷ்ணுவை குறித்து கடுந்தவம் புரிந்தார். அந்த தவத்திற்கு இறங்கி மகாவிஷ்ணு பிரம்மனுக்கு காட்சியளித்து, குருவாக இருந்து படைப்பு தொழிலுக்குரிய வேத மந்திரங்களையும் உபதேசித்து அருளினார். இவ்வாறு பிரம்மன் இங்கு தவமியற்றுவதற்கு முன்பே...

தல பெருமை

தல பெருமை இராமாயணத்தில் இலக்குமணன் ஸ்ரீராமபிரானுக்கு 14 ஆண்டுகள் உறங்காமல் கைங்கர்யம் செய்தது போல் இன்றளவும் இங்கு ஆதிசேஷன் நம்மாழ்வாருக்கு கைங்கர்யம் செய்து வருகிறார். உறங்காப்புளி என்று அழைக்கப்படும் புளியமரத்தின் அடியில்தான் நம்மாழ்வார் 32 ஆண்டுகள் உண்ணாமல் உறங்காமல் தவம் புரிந்தார். அவர் எந்த திவ்ய தேசத்திற்கும் சென்றதில்லை. மாறாக பல திவ்யதேசத்து எம்பெருமான்களும் இங்கு வந்து ஸ்ரீநம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தார்கள்.நம்மாழ்வாரும் அவ்வெம்பெருமான்களை மங்களாசாசனம் பாட செய்தார். இவருடைய மங்களாசாசன தமிழ் பாசுரங்களே, வடமொழியிலான நான்கு வேதங்களுக்கும் சமமான திவ்யப்ரபந்தங்களாக போற்றப்படுகின்றன. சுவாமி நம்மாழ்வார் நான்கு சமஸ்கிருத வேதங்களுக்கு சமமாக தமிழில் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களாவன: ரிக்வேதம் - திருவித்தம் யஜுர் வேதம் -...

இலக்கிய பின்புலம்

ஸ்ரீ மதுரகவிகள் : ஸ்ரீ நம்மாழ்வாரைப் பற்றிப் பாடிய 11 பாடல்கள் கண்ணி நுன் சிறுத்தாம்பினால், கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என்னப்பனில் நண்ணித் தென்குருகூர்நம்பி யென்றக்கால் அண்ணிக்கும் அமு ஸ்ரீ நம்மாழ்வார் திருக்குருகூரைப் பற்றிப் பாடிய 11 பாடல்கள் ஒன்றுந்தேவு முலகு முயிருமற் றும்யாதுமில்லா அன்றுநான்முகன் றன்னோடு தேவருலுகோடுயிர் படைத்தான் குன்றம்போல் மணிமாட நீடு திருகுருகூரதனுள் நின்றவாதிப்பிரான் நிற்க மற்றெத் தெய்வம் நாடுதிரே.

புராண பின்புலம்

தல புராணம்: திருநெல்வேலியிலிருந்து, திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் இலக்கியங்களில் பேசப்படுகின்ற தன் பொருநல் என வழுவாத புகழை உடையதும், வண்டலம்பும் சோலைகளையுடையதும் குன்றம்போல் மணிமாட மாளிகைகள் சூழ்ந்திருப்பதும், சிரங்களால் அமரர் வணங்குவதும், வேதங்களில் ஆதிசேத்ரம் என்றும் அழைக்கப்பட்ட ஆழ்வார்திருநகரியாகிய இத்திருத்தலம் அமைந்துள்ளது. குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு, நாரை, கோழி, குருகத்தி, மதலான பல பொருட்கள் இருப்பதுடன் சங்கு என்ற பெருமை உண்டு. குருகு (சங்கு) பேறுபெற்ற தலமாகையால் இப்பகுதி திருக்குருகூர் ஆயிற்று எனக் கூறுவர். இந்த திவ்வியதேசம், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் முதலிய பெருமைகளை பெற்று விளங்குகிறது. பிரளய வெள்ளத்தால் அழிந்த உலகம் மீண்டும் தோன்றும் போது முதலில் தோன்றிய பதியாதலால் ஆதிபுரி என்றும், சங்கு வலம் வந்து, பேறு எய்திய தலமாதலால் குருகூர் என்றும்,...