அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், Kalugumalai - 628552, தூத்துக்குடி .
Arulmigu Kalugachala Moorthy Temple, Kalugumalai - 628552, Thoothukudi District [TM038204]
×
Temple History
தல வரலாறு
8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்து கோவில். இக்கோயிலின் முக்கிய தெய்வம் முருகன். மலையின் தென்மேற்கு மூலையில் உள்ள கழுகுமலையின் அடிவார மலைகளுக்குள்ளேயே பிரதான தெய்வ மண்டபம் மற்றும் நுழைவு மண்டபம் தோண்டப்பட்டு வெளிப்புற கட்டமைப்பு சேர்க்கைகளுடன் உள்ளது. இந்த கோவிலில் பல அழகியல் சிற்பங்கள் உள்ளன. கோவில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முக்கிய தெய்வம் முருகன் மனைவி தெய்வானை. கோயில் வளாகத்தில் சிவன், அகிலாண்டேஸ்வரி, விநாயகர் மற்றும் பல சிறிய தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்து கோவில். இக்கோயிலின் முக்கிய தெய்வம் முருகன். மலையின் தென்மேற்கு மூலையில் உள்ள கழுகுமலையின் அடிவார மலைகளுக்குள்ளேயே பிரதான தெய்வ மண்டபம் மற்றும் நுழைவு மண்டபம் தோண்டப்பட்டு வெளிப்புற கட்டமைப்பு சேர்க்கைகளுடன் உள்ளது. இந்த கோவிலில் பல அழகியல் சிற்பங்கள் உள்ளன. கோவில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முக்கிய தெய்வம் முருகன் மனைவி தெய்வானை. கோயில் வளாகத்தில் சிவன், அகிலாண்டேஸ்வரி, விநாயகர் மற்றும் பல சிறிய தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.
தல பெருமை
ஒரு முகம் ஆறு கரத்தோடு இந்திர மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கும் முருகன் தலமாகும். செவ்வாய் தோஷம் நீக்கும் செவ்வாய் தலமாகும். குடவற கோவிலாகும்.ஒரு முகம் ஆறு கரத்தோடு இந்திர மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கும் முருகன் தலமாகும். செவ்வாய் தோஷம் நீக்கும் செவ்வாய் தலமாகும். குடவற கோவிலாகும்.
இலக்கிய பின்புலம்
இத்திருத்தலத்தில் பிறந்தாா்க்கும், வாழ்ந்தாா்க்கும் இறைவனை மனமார நினைத்து கசிந்து உள்ளம் உருக வழிபடுவாா்க்கும் வீட்டின்பத்தை (முக்தி) அளிக்கவல்ல திருத்தலமே இத்தலமாகும். முற்காலத்தில் வனமாக இருந்து 300 அடி உயரமுள்ள உவணகிாி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்து வந்தான்.அம்மன்னன் வேட்டையாட வந்தபோது வனத்தில் இருந்த வேங்கைமரத்தடியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் நன்பகலில் பூஜை மணி ஒலிக்கேட்டு விழித்து பாா்த்த போது பசு ஒன்று பாறையில் தானாகபாலைசுரந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பசு அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னா் மன்னன் பாறையை அகற்றி பாா்த்தபோது குகையும் அதில் மயில் மீது அமா்ந்தகோலத்தில் முருகன் காட்சியளிப்பதையும் கண்டு மிகமகிழ்ந்து உள்ளங்களிக்க வழிபட்டான்...இத்திருத்தலத்தில் பிறந்தாா்க்கும், வாழ்ந்தாா்க்கும் இறைவனை மனமார நினைத்து கசிந்து உள்ளம் உருக வழிபடுவாா்க்கும் வீட்டின்பத்தை (முக்தி) அளிக்கவல்ல திருத்தலமே இத்தலமாகும். முற்காலத்தில் வனமாக இருந்து 300 அடி உயரமுள்ள உவணகிாி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சிபுரிந்து வந்தான்.அம்மன்னன் வேட்டையாட வந்தபோது வனத்தில் இருந்த வேங்கைமரத்தடியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் நன்பகலில் பூஜை மணி ஒலிக்கேட்டு விழித்து பாா்த்த போது பசு ஒன்று பாறையில் தானாகபாலைசுரந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பசு அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னா் மன்னன் பாறையை அகற்றி பாா்த்தபோது குகையும் அதில் மயில் மீது அமா்ந்தகோலத்தில் முருகன் காட்சியளிப்பதையும் கண்டு மிகமகிழ்ந்து உள்ளங்களிக்க வழிபட்டான் மனிதா்களால் பிரதிஸ்டை செய்யபடாமல் தேவா்களால் பிரதிஸ்டை செய்யப்பட்ட மூா்த்தி என்றும் தேவா்கள் வந்து பூசிக்கின்ற மூா்த்தி என்றும் உணா்ந்து மக்கள் வழிபட வசதிகள் செய்து வைத்தான். அன்றிலிருந்து வழிபடும் பக்தா்களுக்கு வீடு பேறு அளிக்கும் திருத்தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது.