குன்றுதோறும் குடி கொண்டிருக்கும் குமரக் கடவுள் தலங்கள் பலவற்றுள் மிகச் சிறந்ததாக விளங்குவது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், அருள்மிகு கழுகாசலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் கழுகுமலையேயாகும். இந்த ஊர் கோவில்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் இடையில் உள்ள ஒரு சிறந்த முருகத்தலம். இஃது ஒரு யாத்திரைத் தலமும், ஒரு காணிக்கைத் தலமும் கூட. இங்கு உள்ள மலையின் கற்பாறையைக் குடைந்து குகைக்குள் மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலுக்கு மலையே விமானமாகத் திகழ்கிறது. குடவரைக் கோயிலானதால் கோயில் பிரகாரம் சுற்றிவர வேண்டுமானால் மலையைச் சுற்றி வர வேண்டும். அதற்கு கிரிவலம் என்று பெயர். இத்தலம் கழுகுமலை, தென்பழனி, கழுகாசலம், உவணகிரி, கஜமுகபர்வதம் என்று பல...