அருள்மிகு ஏகாந்தலிங்கசுவாமி திருக்கோயில், ய, காந்தீஸ்வரம் - 628612, தூத்துக்குடி .
Arulmigu Egandalingaswamy Temple, Gandheeshwaram - 628612, Thoothukudi District [TM038222]
×
Temple History
தல வரலாறு
சக்திதானந்த சொருபராகிய பரமசிவன் வீற்றிருக்கும் கைலையங்கிரியிலிருந்து காந்தை முனிவர் என்பவர் பூவுலகிற்கு வந்து, மேறு தீர்த்தம், கங்கை தீர்த்தம், பொதிகை தீர்த்தம் ஆகியவைகளில் நீராடி சிவதலங்கள் பலவற்றை தரிசித்துக் கொண்டு வருகையில் தாமிரபரணி நதிக்கரையில் பசுமையான சோலைகளுக்கு நடுவே இந்தத் திருத்தலத்தைக் கண்டார். அப்போது ஜோதி பிரகாசம் தோன்றவே மிக்க மகிழ்ச்சி கொண்டு, வணங்கி வழிபட சிவலிங்க வடிவு கண்டார். எனவே பூஜைகள் பல செய்து இத்தலத்தில் தவச்சாலை அமைத்து தங்கி வந்தார். முனிவரது அன்புக்குட்பட்ட சிவபெருமான் நேரில் தோன்றி காட்சி அளித்து அப்பனே வேண்டும் வரங்கள் கேள் என்று திருவாய் மலர்ந்தருளினார் காந்தை முனிவர் எம்பிரானே என் பெயரே இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் உமக்கும்,...சக்திதானந்த சொருபராகிய பரமசிவன் வீற்றிருக்கும் கைலையங்கிரியிலிருந்து காந்தை முனிவர் என்பவர் பூவுலகிற்கு வந்து, மேறு தீர்த்தம், கங்கை தீர்த்தம், பொதிகை தீர்த்தம் ஆகியவைகளில் நீராடி சிவதலங்கள் பலவற்றை தரிசித்துக் கொண்டு வருகையில் தாமிரபரணி நதிக்கரையில் பசுமையான சோலைகளுக்கு நடுவே இந்தத் திருத்தலத்தைக் கண்டார். அப்போது ஜோதி பிரகாசம் தோன்றவே மிக்க மகிழ்ச்சி கொண்டு, வணங்கி வழிபட சிவலிங்க வடிவு கண்டார். எனவே பூஜைகள் பல செய்து இத்தலத்தில் தவச்சாலை அமைத்து தங்கி வந்தார். முனிவரது அன்புக்குட்பட்ட சிவபெருமான் நேரில் தோன்றி காட்சி அளித்து அப்பனே வேண்டும் வரங்கள் கேள் என்று திருவாய் மலர்ந்தருளினார் காந்தை முனிவர் எம்பிரானே என் பெயரே இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் உமக்கும், இத்தலத்திற்கும் இப்புண்ணிய தீர்த்தத்திற்கும் அருள்வீர் என்று வேண்டினார். அவ்வாறே இறைவனும் அருளினார் அன்று முதல் இத்தலம் காந்தை நகர் ஆயிற்று என திருநெல்வேலி ஸ்தலபுராணத்தில் அறியக்கிடக்கிறது.
தவத்திரு கருவூர் சித்தர் பெருமான் இத்திருத்தலத்தில் தவச்சாலைகள் அமைத்து இறைவனை வணங்கி வழிபட இறைவன் காந்த சொருபராகிய காட்சிக் கொடுத்து ஆட்கொண்டார்.
கூலிக்குப் பதில் திருநீற்றை கொடுத்து திருச்செந்தூர் இராஜகோபுரத் திருப்பணியை முடித்த திருவாவடுதுறை மடாலய தவத்திரு தேசிகமூர்த்தி சுவாமிகள் வேண்டுவோர் வேண்டுவன அருளும் திருமுருகன் அருள்வாக்குப்படி இத்திருத்தலத்திற்கு வந்து வணங்கி வழிபட்டு இறைவன் இணை அடி நிழலெய்தினார்.
அஷ்ட சித்தர்கள் ஆகிய கவுண்சித்தர், மறைக்காட்டு சித்தர், மௌனகுருசாமி மாயக்கூத்தர், சொக்கலிங்க அடிகள் ஆகிய சித்தர்கள் பலர் வசித்து வழிபட்ட தனி சிறப்புடைய புனித தலமிது. திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய மடாலயங்களின் திருமடங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன.