Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில், Vilathikulam - 628907, தூத்துக்குடி .
Arulmigu Meenakshi Sundareswarar Temple, Vilathikulam - 628907, Thoothukudi District [TM038236]
×
Temple History

தல பெருமை

ஆதிகாலத்தில் திம்மராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூரில் சிவாகம விதிகளில் தேர்ந்த அந்தணர் ஒருவர் இருந்தார் . அவர் வாரந்தோறும் கால்நடையாகவே மதுரைசென்று அன்னை மீனாட்சி அம்மையையும் , சொக்கநாதசுவாமியையும் தரிசித்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் . நாளடைவில் ஏற்பட்ட முதுமை காரணமாக கால்நடையாக மதுரைக்குச் செல்ல இயலாததால் மனம் மிகவும் வருந்தி , கண்ணீர் சிந்தி அழுது தொழுதார் . அன்னை மீனாட்சியை எண்ணி உள்ளம் உருக வேண்டினார் . அதன்பிறகு இறையருளை வேண்டி உணவின்றி , தவழ்ந்து தவழ்ந்து மதுரை செல்ல எத்தணித்தார் . அழைத்த குரலுக்கு ஓடி வந்து அருள்பாலிக்கும் அன்னை மீனாட்சி திம்மராஜபுரத்தில் விளா மரமும் , அத்திமரமும் சேர்ந்த குளக்கரை அருகே இறைவனாருக்கும் , தமக்கும் ஓர்...