அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், Kanyakumari - 629702, கன்னியாகுமரி .
Arulmigu Bagavathiamman Temple, Kanyakumari - 629702, Kanyakumari District [TM038360]
×
Temple History
தல வரலாறு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பற்றிய தலபுராணம் சமஸ்கிருதம், தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது. சம்ஸ்கிருத மூலத்தின் அடிப்படையில் சங்கர நாவலர் என்பவர் தமிழ் தலபுராணத்தை எழுதியிருக்கிறார். இது சுசீந்திரம் தலபுராணத்தைப் பின்பற்றியது. இந்நூலில் ஒரு இடத்தில சூதரிடம் அருளிச் செய்த சிவபுராணம் பத்தினுள் ஒன்றாகிய காந்தம் என்னும் புராணத்தில் இருந்து சுசீந்திரம் புராணம் கூறினீர், என முனிவர்கள் கூறியதாக வருகிறது. சுசீந்திரம் தலபுராணம் 1857ல் இயற்றப்பட்டு 1895ல் அச்சில் வந்தது. எனவே கன்னியாகுமரி தமிழ் தலபுராணம் 1857க்குப் பின் இயற்றப்பட்டது எனக் கருதலாம்.
கன்னியாகுமரி தலபுராணத்தில் கன்னி பகவதி தோன்றியது, தாணுமாலயனை மணம் செய்ய தடை வந்தது, அகத்தியர் இமயமலையைச் சமன் செய்யத் தென்குமரிக்கு வந்தது என புராணக்கதைகளும் வட்டாரரீதியான சில...கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பற்றிய தலபுராணம் சமஸ்கிருதம், தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது. சம்ஸ்கிருத மூலத்தின் அடிப்படையில் சங்கர நாவலர் என்பவர் தமிழ் தலபுராணத்தை எழுதியிருக்கிறார். இது சுசீந்திரம் தலபுராணத்தைப் பின்பற்றியது. இந்நூலில் ஒரு இடத்தில சூதரிடம் அருளிச் செய்த சிவபுராணம் பத்தினுள் ஒன்றாகிய காந்தம் என்னும் புராணத்தில் இருந்து சுசீந்திரம் புராணம் கூறினீர், என முனிவர்கள் கூறியதாக வருகிறது. சுசீந்திரம் தலபுராணம் 1857ல் இயற்றப்பட்டு 1895ல் அச்சில் வந்தது. எனவே கன்னியாகுமரி தமிழ் தலபுராணம் 1857க்குப் பின் இயற்றப்பட்டது எனக் கருதலாம்.
கன்னியாகுமரி தலபுராணத்தில் கன்னி பகவதி தோன்றியது, தாணுமாலயனை மணம் செய்ய தடை வந்தது, அகத்தியர் இமயமலையைச் சமன் செய்யத் தென்குமரிக்கு வந்தது என புராணக்கதைகளும் வட்டாரரீதியான சில கதைகளும் உள்ளன.
கன்னியாகுமரி தலபுராணம் சூதர்கள் கூறுவதைப் போன்ற அமைப்புடையது. முனிவர்களும் சூதர்களிடம்
ஒற்றையால் காலில் உள்ள
ஒருபெரு விரலை ஊன்றி
மற்றையோர் காண முழந்தாள்
மடக்க நீர் குறங்கில் வைத்து
பற்றிரு கரமும் கூப்பிப்
பரந்தவிழ் சடையினோடும்
சற்று முன் நின்று
தவம் செய்வர் அனேக கோடி
எனக் கதையை ஆரம்பிக்கிறார்.
நாவலன் தீவு அரசன் ஆக்கினேந்திரன். இவனது ஒன்பது மக்களில் பரதன் ஆண்ட இடம் பரத கண்டம். இவனுக்கு எட்டு ஆண் மக்கள், ஒரு புதல்வி. அவள் தென்குமரி தென் துறையில் இருந்தாள். இராமன் இலங்கை செல்லும் முன் அவளிடம் ஆசி பெற்றுச் சென்றான். அப்போது அவன் ஆதிசேது எனக் கன்னியாகுமரியை அழைத்தான். இந்திரன் தன் பாவம் தீர குமரியிலும் தவம் செய்தான். இமையமலையில் சிவன், பார்வதி திருமணம் நடந்த போது இமையம் உயர்ந்தது. இதைச் சமன் செய்ய அகத்தியர் தென்குமரிக்கு வந்து கன்னிகுமரியை வணங்கி விட்டு பொதிகை மலை சென்றார்.
அசுரர்களின் அரசன் பாணாசுரன். அவன் தேவர்களுக்கும் பூவுலக மக்களுக்கும் பெருந்துன்பம் செய்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும் என்றார் திருமால். தேவர்கள் சக்தியை வேண்டினர். சக்தி அசுரனை அழிக்க கன்னியாகுமரியில் வந்து தவம் செய்தாள். கன்னியாக இருந்த அவளைத் திருமணம் செய்ய தாணுமாலயன் வந்தார். கன்னி, மணம் செய்தால் பாணாசுரனை வதைக்க முடியாது என்பதால் அந்த திருமணத்தைத் தடை செய்ய நாரதரைத் தூண்டினார் திருமால். நாரதர் தாணுமாலயனிடம் கன்னி பகவதியைச் சூரிய உதயத்திற்கு முன்பு மணம் செய்வது உகந்தது. இல்லையென்றால் மணம் நிகழாது என்றார். சிவனும் அதற்கு இசைந்தார். சிவன் மணநாளில் சூரியோதத்திற்கு முன்பு புறப்பட்டு வந்தபோது நாரதர் வழுக்கம்பாறை கிராமத்தில் இருந்து சேவல் போல் கூவினார். தாணுமாலயன், விடிந்து விட்டது என்று திரும்பி விட்டார். இதனால் பகவதி கன்னியாக இருந்தாள். இதன் பிறகு பாணாசுரன் கன்னிகுமரியின் அழகை கேள்வியுற்று அவளை அடைய வந்தான். தேவி இது தான் தருணம் என நினைத்து வாளை வீசினாள். பாணாசுரனைக் கொன்றாள்.
அசுரர்களின் கொடுமையைப் பொறுக்க முடியாத தேவர்கள் காசி விஸ்வநாதரை அணுகினர். அவர் இரண்டு பெண்களைப் படைத்தார். ஒருத்தி கொல்கத்தாவில் காளியாக அமர்ந்தாள். இன்னொருத்தி கன்னியாகுமரியில் இருந்தாள். இப்படியொரு கதை தலபுராணத்தில் வழங்குகிறது.
பகவதி நிலைபெற்ற இத்தலத்த்தில் சக்கர தீர்த்தம், கணேச தீர்த்தம், தாணு தீர்த்தம், பீம தீர்த்தம், பிதுர் தீர்த்தம், மாத்ரு தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் பெயரிலும் தீர்த்தங்கள் உள்ளன. இந்திரன் தன் பாவம் தீர நீராடிய பாபநாச தீர்த்தம் இங்கே உள்ளது. சூதாடிய தர்மரின் கையில் நெருப்பை வைப்பேன் என்று சொன்னதால் சாபம் பெற்ற பீமன் விமோசனம் பெற கன்னியாகுமரிக்கு வந்து நீராடினான். அவன் நீராடிய இடம் பீம தீர்த்தம் ஆயிற்று. பரசுராமன் இங்கே வந்து கணேசனைப் பூஜித்தார். அந்த இடம் கணேச தீர்த்தம் ஆயிற்று. இப்படியாக இங்கு பாபவிமோசனம் பெற்றவர் பலர்.