கருவறை கிழக்கு நோக்கியதாயினும் வடக்கு வாசலே பொதுமக்களின் பயன்பாட்டிற்குள்ளதாய் இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கிழக்கு வாசல் வழி பக்தர்கள் சென்றதைப் பற்றிகன்னியாகுமரி களவு மாலை நூல் கூறும். இதன் பிறகு சில காரணங்களால் இந்தக்கதவு நிரந்தரமாய் அடைக்கப்பட்டு விட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வெளிப்பிரகாரம், முகமண்டபம், நவராத்திரி மண்டபம், தியான மண்டபம், உள் பிரகாரம், கருவறையைச் சுற்றிய சிறு பிரகாரம், அர்த்த மண்டபம், கருவறை என அமைந்தது. கோயில் செவ்வக வடிவினது. செப்புக்கொடிமரம், திராவிட வகை விமானம், பரிவார கோயில்கள், சிறு பிரகாரம் என அமைந்தது.. கோயிலின் முன்மண்டபத்தில் மேலே கஜலெட்சுமி உருவம், இம்மண்டபத்தின் மேற்கே கொலு மண்டபம் எனப்படும் நவராத்திரி மண்டபமும் கிழக்கில் பயணிகள் உட்கார்ந்து இளைப்பாறசிறுமண்டபமும் உள்ளன....
| 04:30 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 12:30 PM IST - 08:30 PM IST | |
| காலை 4.30 மணி திருநடைதிறப்பு காலை 5.00 மணி அபிஷேகம் காலை 6.99 மணி தீபாராதனை காலை 10.00 மணி அபிஷேகம் காலை 11.30 மணி உச்சகால பூஜை பகல் 12.30 மணி திருநடை அடைப்பு மாலை 4.00 மணி திருநடைதிறப்பு மாலை 6.30 மணி சாயராட்சை தீபாராதனை இரவு 8.15 மணி ஸ்ரீபலி இரவு 8.25 மணி ஏகாந்த தீபாராதனை இரவு 8.30 மணி திருநடை அடைப்பு | |