அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோயில், Kanyakumari - 629702, கன்னியாகுமரி .
Guhanatheeswarar Temple, Kanyakumari - 629702, Kanyakumari District [TM038361]
×
Temple History
தல பெருமை
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கும் 52 இக்கோயில் பற்றிய பழம் கதை கன்னியாகுமரி பகவதி அம்மன் தலபுராணத்தில் உள்ளது. இத்தலபுராணம் எழுத்து வடிவில் அமைந்தது. கன்னியாகுமரி தலபுராணத்தில் இக்கோயில் இறைவன் கோனாண்டேஸ்வரன், குகனாண்டேஸ்வரன் எனப்படுகிறான். கருவறை குகைபோல் இருப்பதாலும் சுருங்கிய பிரகாரம் இருப்பதால் குகை ஈஸ்வரன் எனப்பட்டான். அதனால் குகனாண்டேஸ்வரன் ஆனான். கன்னியாகுமரித் தலபுராண ஆசிரியர் குகனாகிய முருகன் தந்தை சிவனை வழிபட்ட இடம் இது எனக் கூறுகிறார். இக்கோயில் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ளது. திருக்கோயிலின் முன்பகுதியில் கோயில் பெயர் தாங்கிய பலகை உண்டு. நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி சென்றுஅம்மனைத் தரிசித்து விட்டு இக்கோயிலுக்கு வரலாம். இக்கோயிலைப்...கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த அழகிய சூழலில் அமைந்திருக்கும் 52 இக்கோயில் பற்றிய பழம் கதை கன்னியாகுமரி பகவதி அம்மன் தலபுராணத்தில் உள்ளது. இத்தலபுராணம் எழுத்து வடிவில் அமைந்தது. கன்னியாகுமரி தலபுராணத்தில் இக்கோயில் இறைவன் கோனாண்டேஸ்வரன், குகனாண்டேஸ்வரன் எனப்படுகிறான். கருவறை குகைபோல் இருப்பதாலும் சுருங்கிய பிரகாரம் இருப்பதால் குகை ஈஸ்வரன் எனப்பட்டான். அதனால் குகனாண்டேஸ்வரன் ஆனான். கன்னியாகுமரித் தலபுராண ஆசிரியர் குகனாகிய முருகன் தந்தை சிவனை வழிபட்ட இடம் இது எனக் கூறுகிறார். இக்கோயில் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ளது. திருக்கோயிலின் முன்பகுதியில் கோயில் பெயர் தாங்கிய பலகை உண்டு. நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி சென்றுஅம்மனைத் தரிசித்து விட்டு இக்கோயிலுக்கு வரலாம். இக்கோயிலைப் பார்த்து விட்டு விவேகானந்தபுரம் செல்லலாம். வாகனங்களைக் கோயிலருகேநிறுத்த முடியும்